Paris Saint-Germain அணியின் நம்பிக்கை நட்சத்திரமான நெய்மர், ஒன்லைன் சூதாட்டத்தில், ஒரு மணி நேரத்தில் 900,000 பவுண்டுகள் தொகையை மொத்தமாக இழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
900,000 பவுண்டுகள் தொகை
ஒரே நாளில், தமது டுவிட்டர் கணக்கையும் 900,000 பவுண்டுகள் தொகையையும் நெய்மர் இழந்துள்ளதும், அதன் பின்னர் அவரது நடவடிக்கையும் தற்போது பலரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது.
Image: futebolizein
பிரேசில் கால்பந்து நட்சத்திரமான நெய்மர் கணுக்கால் அறுவை சிகிச்சை காரணமாக தற்போது ஓய்வில் இருந்து வருகிறார்.
இந்த நிலையில் தமக்கு மிகவும் பிடித்தமான கால்பந்து விளையாட்டை அடுத்து போக்கர் ஆட்டத்தில் நேரம் செலவிட்டு வருகிறார்.
ஐரோப்பிய போக்கர் விளையாட்டு போட்டிகளிலும் முன்னர் நெய்மர் கலந்துகொண்டுள்ளார்.
அவருக்கு எதிராக போட்டியிட்ட பலரும், ஒரு நாள் போக்கர் களத்தில் நெய்மர் உச்சம் தொடுவார் என்றே நம்பிக்கை தெரிவித்திருந்தனர்.
போக்கர் ஆட்டத்தில் பலமுறை பெருந்தொகை அள்ளியிருக்கிறார் நெய்மர். ஆனால் இந்த முறை, ஒரே மணி நேரத்தில் சுமார் 900,000 பவுண்டுகள் தொகையை மொத்தமாக இழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இணையமூடாக நடந்த இந்த விளையாட்டில், நெய்மர் பெருந்தொகையை இழந்ததும் கதறி அழுதார் என முதலில் தகவல் வெளியானது. உண்மையில், அப்படி அல்ல எனவும், பொய்யாக அவர் அழுவது போன்று நடித்தார் எனவும் கூறப்படுகிறது.