உலகில் இன்டர்நெட் (இணையம்) வேகத்தில் ஆசிய நகரங்கள் முன்னிலை பெற்றுள்ளன. ‘நீரின்றி அமையாது உலகு’ என்றார் வள்ளுவர். இன்று இன்டர்நெட் இன்றி
எதுவும் அசையாது’ என்ற நிலைமை ஏற்பட்டுள்ளது. இணையம் மூலம் நமக்கு தேவையான பல்வேறு தகவல்களையும் அறிந்து கொள்ள முடிகிறது. அதுவும் ஸ்மார்ட்போன் வரவுக்குப்பின் உலகமே உள்ளங்கை என்றாகி விட்டது. இன்டர்நெட் வேகம் (அலைபேசி, பிராட்பேண்ட்) உலகில் எந்த நகரங்களில்
அதிகம் என அமெரிக்காவை சேர்ந்த ‘ஊக்லா’ நிறுவனம் ஆய்வு நடத்தியது. 179 நாடுகளின் 200 நகரங்கள் இடம்பெற்றன. இதில் லண்டன், நியூயார்க், பாரிஸ் போன்ற நகரங்களை
முந்தி ஆசியாவின் பீஜிங் முதலிடத்தை பெற்றது.
அடிப்படை உரிமை
‘இன்டர்நெட்’ வசதி என்பது மக்களின் அடிப்படை உரிமை என 2016ல் ஐ.நா., தெரிவித்தது. இருப்பினும் உலகில் இன்னும் பல பகுதி மக்களுக்கு போதிய அளவில் இன்டர்நெட் வசதி கிடைக்கவில்லை. உலகில் 380 கோடி பேர் வேகமான, நம்பகமான இன்டர்நெட் வசதி கிடைக்காமல் உள்ளனர். அமேசான், ஸ்டார்லிங், கூகுள், ராக் குரூப், பேஸ்புக் உள்ளிட்ட நிறுவனங்கள் உலகளவில் இன்டர்நெட் சேவையை வழங்குவதற்கான பணியில் ஈடுபட்டுள்ளன.
உலகம் எப்படி
‘டவுன்லோடு’ செய்வதில் உலகின் சராசரி இன்டர்நெட் வேகம் (அலைபேசி 37.98 எம்.பி.பி.எஸ்., பிராட்பேண்ட் 76.34 எம்.பி.பி.எஸ்.,) உள்ளது.
Advertisement