நரிக்குறவர்கள் படம் பார்க்க அனுமதிக்காத புகாரில் ரோகிணி திரையரங்க பணியாளர் மீது, கோயம்பேடு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.
நடிகர் சிம்புவின் ‘பத்து தல’ என்ற திரைப்படம் இன்று வெளியாகியது. இந்த திரைப்படத்தின் ரசிகர்கள் காட்சிக்கான டிக்கெட்களை, நரிக்குறவர் இன மக்களுக்கு இலவசமாக சிம்பு ரசிகர்கள் கொடுத்துள்ளனர்.
இதனையடுத்து ரோகிணி திரையரங்கில் படம் பார்க்க சென்ற நரிக்குறவ இன மக்களை, ‘உங்களுக்கு அனுமதி இல்லை’ என்று டிக்கெட் பரிசோதகர் வெளியே அனுப்பினார்.
இந்த காட்சி சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி நிலையில், ரோகிணி திரையரங்கம் மீதும், அந்த பணியாளர் மீதும், உரிமையாளர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
ஏன் இவங்க எல்லாம் மனுசன் இல்லையா ?
கோயம்பேடு ரோகினி திரையரங்கம் மீது உடனடியாக நடவெடிக்க எடுக்க வேண்டும்.
— Abinesh (@SuriyaAbi6) March 30, 2023
இதனை அடுத்து ரோகிணி திரையரங்கம் விளக்கம் அளித்து ஒரு அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில், படம் யூ/ஏ சான்றிதழ் பெற்ற படம் என்பதால் சிறுவர்களை அனுமதிக்க இயலாது. அதன் காரணமாகவே திரையரங்கில் அனுமதிக்கவில்லை என்ற ஒரு விளக்கத்தை கொடுத்தது.
இந்த நிலையில், கோயம்பேடு காவல் நிலைய போலீசார் திரையரங்க பணியாளர் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.