கோயம்பேடு பேருந்து நிலையம் திறப்பதற்கு முன்பு ஒருங்கிணைத்த பேருந்து நிலையமாக இருந்தது பிராட்வே பேருந்து நிலையம். இந்த நிலையில் தற்போது மீண்டும் பிராட்வேயில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையமாக மாற்ற தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
அந்த வகையில் சென்னை பிராட்வே பேருந்து நிலையம் பல்நோக்கு ஒருங்கிணைந்த போக்குவரத்து பேருந்து நிலையமாக மாற்றப்படும் என்று நகராட்சி நிர்வாகத்துறை கொள்கை விளக்க குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி பிராட்வே பேருந்து நிலையத்தில் பல்நோக்கு வசதி வளாகம் அமைக்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதால் வாகன நிறுத்தம், வணிக வளாகம் உள்ளிட்ட பல்வேறு கட்டமைப்பு வசதிகளுடன் கட்டப்படும் இடத்தை தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிராட்வே பேருந்து நிலையத்தை ஒருங்கிணைந்த பேருந்து நிலையமாக மாற்ற பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்து நிலையில் தற்போது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.