திருச்சியில் குழந்தைகள் காப்பகத்தில் தடுப்பூசி போடப்பட்ட 8 பச்சிளம் குழந்தைகளுக்கு திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது.
திருச்சி மாவட்டத்தில் உள்ள திருவானைக்காவில் மாம்பலா சாலை பகுதியில் ஆதரவற்ற குழந்தைகளுக்கான காப்பகம் ஒன்று இயங்கி வருகிறது. இந்த நிலையில் இன்று காப்பகத்தின் 20 குழந்தைகளுக்கு சளிக்கான தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதில், 8 குழந்தைகளுக்கு திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து உடனடியாக வீட்டு அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். தற்போது அங்கே சிகிச்சை பெற்று வரும் குழந்தைகள் நலமாக இருப்பதாகவும் சளி காரணமாக தான் மூச்சு திணறல் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.