சென்னை: சென்னை கோயம்பேட்டில் பட்டாக்கத்திகளுடன் சிக்கிய பச்சையப்பன் கல்லூரி மாணவரிடம் போலீஸ் விசாரணை நடத்தி வருகிறது. போலீசாரின் ரோந்து வாகனத்தை கண்டதும் தப்பியோடிய மாணவர்கள் 9 பேருக்கு வலைவீசியுள்ளது. பிடிபட்ட மாணவன் வெற்றிவேலின் பையில் இருந்து 4 பட்டாக் கத்திகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.