இந்தூர் கோயில் படிக் கிணறு இடிந்து விழுந்து விபத்து – பலி எண்ணிக்கை 35ஆக உயர்ந்தது


மத்தியப் பிரதேச மாநிலம், இந்தூரில் படிக்கட்டுக் கிணறு இடிந்து விழுந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 35ஆக உயர்ந்துள்ளது.

கிணறு இடிந்து விழுந்து பயங்கர விபத்து

நேற்று (வியாழக்கிழமை) ராம நவமியை முன்னிட்டு மத்தியப் பிரதேச மாநிலம், இந்தூரில் உள்ள பெலாஷ்வர் மகாதேவ் கோயிலில் அதிகமான பக்தர்கள் வழிபாட்டிற்காக ஒன்று கூடினர்.

அப்போது படிக்கட்டு கிணற்றின் கூரை மேல் நின்றிருந்த பக்தர்களின் கணம் காரணமாக கிணறு சரிந்து விழுந்தது. இந்த விபத்தில் பக்தர்கள் கிணற்றில் விழுந்தனர்.

இது குறித்து போலீசாருக்கும், தீயணைப்புத்துறையினருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர் கயிறு மற்றும் ஏணிகள் துணையுடன் மீட்கும் பணிகளை மேற்கொண்டனர்.

இந்த விபத்தில் காயம் அடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த விபத்தில் நேற்று 12 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

indore-temple-stepwell-collapse

பலி எண்ணிக்கை 35 ஆக உயர்ந்தது

தற்போது, இது தொடர்பாக இந்தூர் கலெக்டர் டாக்டர் இளையராஜா பேசுகையில், தற்போது இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 35 ஆக உயர்ந்துள்ளதாகவும், காயம் அடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட 18 பேர் தற்போது வீடு திரும்பியுள்ளனர் என்றும் கிணற்றில் காணாமல் போன ஒருவரை தேடும் பணி நடந்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.   





Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.