சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் அறிமுகமாகி ரசிகர்கள் மத்தியில் பிரபலமான மணிகண்டன் அடுத்ததாக வெப்சீரிஸ் ஒன்றில் ஹீரோவாக நடிக்க உள்ளார்.
தமிழ் சினிமாவின் திறமையான நடிகைகளில் ஒருவராக திகழும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் அண்ணன் தான் மணிகண்டன் என்பது அனைவரும் அறிந்த ஒன்று தான்.
பிக் பாஸ் வீட்டில் அண்ணன் மணிகண்டன் இருந்த போது அவருக்காக ஓட்டுக் கேட்ட ஐஸ்வர்யா ராஜேஷ் ஃப்ரீஸ் டாஸ்க்கின் போது பிக் பாஸ் வீட்டிற்கே வந்து அண்ணனை உற்சாகப்படுத்தினார்.
உமன் சென்ட்ரிக் படங்களில்
தெலுங்கில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான ஐஸ்வர்யா ராஜேஷ் சில தமிழ் படங்களில் நடித்து வந்த நிலையில், அட்டகத்தி படத்தில் நடித்து பிரபலமானார். காக்கா முட்டை, கனா, க/பெ. ரணசிங்கம், வடசென்னை உள்ளிட்ட பல படங்களில் நடித்து தனது நடிப்புத் திறமையை காட்டிய ஐஸ்வர்யா ராஜேஷ் சமீப காலமாக உமன் சென்ட்ரிக் படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் இவர் நடிப்பில், டிரைவர் ஜமுனா, தி கிரேட் இந்தியன் கிச்சன், ரன் பேபி ரன் உள்ளிட்ட படங்கள் வரிசையாக வெளியாகின.
பிக் பாஸ் மணிகண்டன்
பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் போட்டியாளராக ஐஸ்வர்யா ராஜேஷின் அண்ணன் மணிகண்டன் கலந்து கொண்டார். ராஜா வீட்டுக் கன்னுக்குட்டியாக நிகழ்ச்சி முழுக்க இளம் பெண்கள் சூழ படு ஜாலியாக விளையாடி விட்டு சில இடங்களில் சண்டைப் போட்டு தனது இருப்பைக் காட்டிக் கொண்டு வெளியேறினார் மணிகண்டன்.
தங்கையின் உதவி
பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்ட அண்ணன் மணிகண்டனை கஷ்டப்பட்டு ஃப்ரீஸ் டாஸ்க் வரை கொண்டு வந்தார் ஐஸ்வர்யா ராஜேஷ் என்று ஏகப்பட்ட ட்ரோல்கள் குவிந்தன. ஐஸ்வர்யா ராஜேஷ் வந்து சென்ற பிறகு மணிகண்டன் அதிரடியாக வெளியேறியது சோஷியல் மீடியாவில் ஏகப்பட்ட ட்ரோல்களை குவித்தது.
டிரைவர் ஜமுனாவில்
ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் வெளியான டிரைவர் ஜமுனா படத்திலேயே மணிகண்டன் நடித்து நடிகராக கோலிவுட்டில் என்ட்ரி கொடுத்து விட்டார். இந்நிலையில், தனியாக வெப்சிரீஸ் ஒன்றில் மணிகண்டன் களமிறங்க உள்ள நிலையில், அதற்கான பூஜை சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது.
மைடியர் டயானா வெப்சீரிஸ்
அறிமுக இயக்குநர்கள் பி. கே. விஜய் மற்றும் கிரிதர் ராமகணேஷ் இயக்கத்தில் உருவாக உள்ள மைடியர் டயானா வெப்சீரிஸில் ஹீரோவாக அறிமுகமாக உள்ளார் பிக் பாஸ் மணிகண்டன். அவருக்கு ஜோடியாக மகாலக்ஷ்மி எனும் நடிகை நடிக்க உள்ளார். இந்த வெப்சீரிஸ் அறிமுக விழாவில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷும் பங்கேற்ற புகைப்படங்கள் வெளியாகி உள்ளன.