வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
கராச்சி: பாகிஸ்தானில் வசிக்கும் ஹிந்து மதத்தை சேர்ந்த பெண்கள் மற்றும் சிறுமிகள் கடத்தப்பட்டு கட்டாய மதமாற்றம் செய்யப்படுவதை கண்டித்தும், அதற்கு எதிராக சட்டம் கொண்டு வர வலியுறுத்தியும் ஹிந்து அமைப்பினர் போராட்டம் நடத்தினர்.
பாகிஸ்தானில் சிந்து மாகாணத்தில் வசிக்கும் ஹிந்து மதத்தை சேர்ந்த இளம் பெண்கள், சிறுமிகள், திருமணமான பெண்கள் ஆகியோர் கடத்தி செல்லப்பட்டு, கட்டாயமாக இஸ்லாம் மதத்திற்கு மதமாற்றம் செய்யப்பட்டு, திருமணம் செய்து வைக்கப்படுகின்றனர். இது தொடர்பாக பாதிக்கப்பட்டவர்கள் நீதி கேட்டு, நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். ஆனால், அவர்களுக்கு எந்த நிவாரணமும் கிடைத்ததாக தெரியவில்லை.
இந்நிலையில், இந்த விவகாரத்தில் தங்களுக்கு நீதிகேட்டு ஹிந்து அமைப்பினர் அமைதியாக போராட்டம் நடத்தினர். பாகிஸ்தான் தராவர் இதேஹத் என்ற ஹிந்து அமைப்பை சேர்ந்தவர்கள் கராச்சி பிரஸ் கிளப் மற்றும் சிந்து சட்டசபை முன்பு போராட்டம் நடத்தினர். பெண்கள் கட்டாயமாக மதமாற்றம் செய்யப்படுவதை தடுக்கும்படியும், அதற்கு சட்டம் கொண்டு வரும்படியும் பதாகைகள் ஏந்தி வந்தனர். போராட்டம் காரணமாக அங்கு போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர்.
Advertisement