சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே கடன் தருவதாக முன்பணம் பெற்று மோசடியில் ஈடுபட்ட நிதி நிறுவன அதிபர் மற்றும் மேலாளரை கைது செய்து மூன்று கோடி ரூபாய் போலி நோட்டுகளை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
முத்துப்பட்டினத்தில் நிதிநிறுவனம் நடத்திவரும் அன்பழகன் என்பவரிடம் மகாலட்சுமி என்பவர் 10 லட்சம் ரூபாய் கடனாக கேட்டுள்ளார். முன்பணம் கட்டினால் மட்டுமே கடன் வழங்கப்படும் என்றும், கடன் வழங்கும்போது, கட்டிய பணமும் சேர்த்து தரப்படும் என்று தெரிவித்ததையடுத்து மகாலட்சுமி 5 லட்சம் ரூபாய் கொடுத்துள்ளார்.
பணம் கொடுத்து பல நாட்கள் ஆகியும் கடன் கொடுக்காமல் அலைக்கழித்ததால், மகாலட்சுமி போலீசில் புகாரளித்துள்ளார். அன்பழகனை கைது செய்து போலீசார் விசாரித்துக் கொண்டிருந்தபோது இதே பாணியில் அவரிடம் 10 லட்சம் கொடுத்து ஏமாந்த ஷேக் மதார் என்பவரும் புகாரளித்தார். போலி ரூபாய் நோட்டுக் கட்டுகளை காண்பித்து அன்பழகன் அவரை ஏமாற்றி இருப்பது தெரியவந்தது.