நாளை புதிய நிதியாண்டு தொடங்குவதால் பல பொருட்களின் விலையில் மாற்றம் ஏற்படுகிறது.
அந்த வகையில், சிகரெட், தங்கம், வெள்ளி நகைகள், வெளிநாட்டு சைக்கிள், பொம்மைகளின் விலைகள் உயருகின்றன. செல்போன்கள், செயற்கை வைரம், உள்நாட்டு பொம்மை, சைக்கிள், டிவி ஆகியவற்றின் விலைகள் குறைகின்றன.
இவை இல்லாமல் பல மாற்றங்கள் நாளை ஏற்பட வாய்ப்பு உள்ளது. நாளை முதல் வர்த்தக வாகனங்களின் விலையை 2 முதல் 5 சதவீதம் வரை உயர்த்துவது என்று டாடா மோட்டார்ஸ், மாருதி சுஜுகி, ஹோண்டா, ஹீரோ மோட்டோகார்ப் ஆகிய நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன.
அத்தியாவசிய மருந்துகளின் விலையை நாளை முதல் உயர்த்த மருந்து நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. வலி நிவாரணிகள், தொற்று எதிர்ப்பு மருந்துகள், இதய நோய் மருந்துகள், நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்துகள் உள்ளிட்டவை விலை அதிகரிக்கும் என்று தெரிகிறது.
காய்ச்சல், தொற்றுகள், தோல் நோய்கள், உயர் ரத்த அழுத்தம், ரத்த சோகை மற்றும் இதய நோய்களுக்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தப்படும் 800 அத்தியாவசிய மருந்துகளின் விலை 10.7 சதவீதம் வரை உயருகிறது.
ஒவ்வொரு மாதத்தின் முதல் நாள் வீட்டு பயன்பாடு மற்றும் வணிக பயன்பாடு கேஸ் சிலிண்டர்களின் விலையில் மாற்றம் செய்யப்படுகிறது. அதன்படி நாளை எரிவாயு சிலிண்டர் விலையில் ஏதேனும் மாற்றம் வரலாம். ஏற்கனவே சிலிண்டர் விலை கடுமையாக உயர்ந்துள்ள நிலையில் மாற்றம் வந்தால் மக்கள் கடுமையாக பாதிக்கப்படுவர்.
newstm.in