கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பீளமேடு பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் அதேபகுதியில் அழகுநிலையம் வைத்து நடத்தி வருகிறார். இந்த நிலையில் நேற்று முன்தினம் அந்த இளம்பெண் அழகு நிலையத்தில் இருந்த போது அவருக்கு ஏற்கெனவே அறிமுகமான மூன்று பெண்கள் உட்பட நான்கு பேர் அங்கு வந்தனர்.
அங்கு அவர்கள் அந்த பெண்கள் இளம்பெண்ணிடம் பணம் கேட்டுள்ளனர். அதற்கு அந்த இளம்பெண் மறுப்புத் தெரிவித்துள்ளார். இதைத்தொடர்ந்து அந்த பெண்கள் பணம் தரவில்லையென்றால் உன்னை நிர்வாணமாக வீடியோ எடுத்து சமூகவலைதளத்தில் வெளியிடுவோம் என்று மிரட்டல் விடுத்து விட்டு சென்றனர்.
இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த அந்த இளம்பெண் சம்பவம் குறித்து போலீஸில் நேற்று புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் படி, போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். அந்த விசாரணையில், அழகு நிலையம் வைத்துள்ள இளம்பெண்ணிடம் மிரட்டல் விடுத்தது மூன்று பெண்கள் மற்றும் ஒரு ஆண் என்பது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் அவர்கள் மீது மிரட்டல் மற்றும் பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.