சென்னை : விஜய் டிவியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளிகள், குக்குகள் சிறப்பான என்டர்டெயின்மெண்டை ரசிகர்களுக்கு கொடுத்து வருகின்றனர்.
இந்த நிகழ்ச்சி ரசிகர்களுக்கு மிகச்சிறந்த ஸ்ட்ரெஸ் பர்ஸ்டராக அமைந்துள்ள நிலையில், இந்த நிகழ்ச்சியை சீசன்களாக மட்டுமில்லாமல் தொடர்ந்து ஒளிபரப்ப ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
இந்த நிகழ்ச்சியில் கடந்த சீசன்களில் கோமாளியாக இருந்த ஷிவாங்கி தற்போது குக்காக மாறி தன்னுடைய டிஷ்களால் ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.
குக் வித் கோமாளி சீசன் 4 நிகழ்ச்சி
விஜய் டிவியின் பிக்பாஸ், குக் வித் கோமாளி நிகழ்ச்சிகள் தொடர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகின்றன. அந்த வகையில் தொடர்ந்து ரசிகர்களை கவர்ந்த பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி கடந்த ஜனவரி மாதத்தில் நிறைவடைந்தது. இதையடுத்து சில தினங்களிலேயே குக் வித் கோமாளி சீசன் 4 நிகழ்ச்சி அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து நிகழ்ச்சி துவங்கப்பட்டு, ஒவ்வொரு வாரயிறுதியிலும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.
புகழின் வித்தியாசமான கெட்டப்புகள்
இந்த நிகழ்ச்சியின் அடுத்தடுத்த மூன்று சீசன்கள் ரசிகர்களின் விருப்பத்திற்கு நெருக்கமாக அமைந்த நிலையில், தற்போது நடைபெற்றுவரும் 4வது சீசனிலும் வித்தியாசமான டாஸ்க்குகளுடன் அடுத்தடுத்த வாரங்கள் களைகட்டி வருகின்றன. கடந்த 4 வாரங்களாக இந்த குக் வித் கோமாளி சீசனில் பல நிகழ்வுகள் நடைபெற்று ரசிக்களை கவர்ந்து வருகின்றன. நடிகர் புகழ், இந்த நிகழ்ச்சியில் வித்தியாசமான கெட்டப்புகளில் வந்து ரசிகர்களை தொடர்ந்து கவர்ந்து வருகிறார்.
குக்காக மாறிய ஷிவாங்கி
கடந்த சீசன்களில் கோமாளியாக ரசிகர்களை வெகுவாக கவர்ந்து, சினிமாவிலும் வாய்ப்புகளை பெற்றவர் ஷிவாங்கி. இவர் தற்போது இந்த சீசனில் குக்காக மாறியுள்ளார். அவருடன் கோமாளியாக கடந்த சீசன்களில் இருந்துவந்த புகழ், குரேஷி உள்ளிட்டவர்கள் கோமாளிகளாகவே தொடர்ந்துவரும் நிலையில், ஷிவாங்கி தற்போது குக்காக மாறி, பல டாஸ்க்குகளை சிறப்பாக செய்து, பேண்டையும் பரிசாக பெற்று வருகிறார்.
கேரள டிஷ்களை செய்து அசத்தல்
அவரை சக போட்டியாளர்கள், சிறப்பான போட்டியாளராக வர்ணிக்கும்வகையில் அவரது முன்னேற்றம் காணப்படுகிறது. கேரள டிஷ்களாக செய்தும் அசத்துகிறார். அடுத்தடுத்து சிறப்பாக செயல்பட்டுவரும் அவரை அட்வான்டேஜ் சுற்றில் ஜெயித்த மைம் கோபி வைத்து செய்கிறார். பாகற்காயை ஷிவாங்கிக்கு மாற்றிவிட்டு, அதில் டெசர்ட் செய்ய சொல்கிறார். இதனால் அதிர்ச்சிக்குள்ளான ஷிவாங்கி, தன்னுடைய வாழ்க்கையில் என்ன நடிக்கிறது என்று நடுவர்களிடம் கேள்வி எழுப்புகிறார்.
மாட்டிவிட்ட மைம் கோபி
இதையடுத்து பேசிய அவரது கோமாளி, மைம் கோபி வில்லன் என்றும் சரியான நேரத்தில் அவர் தனது வில்லத்தனத்தை காட்டியுள்ளதாகவும் கூறுவதாக தற்போது வெளியாகியுள்ள ப்ரமோவில் காணப்படுகிறது. பாகற்காயில் இனிப்பா என்பதாக ஷிவாங்கியின் ரியாக்ஷன் காணப்படுகிறது. இந்தப் ப்ரமோவை பார்த்து ஷிவாங்கி ரசிகர்கள், அவர் என்ன செய்யப் போகிறார் என்பதை அறிய மிகவும் ஆவலாக உள்ளதாக கமெண்ட் செய்து வருகின்றனர்.