விஜய் Uncle என்ன பார்க்க வாங்க…? என்று மழலை குரலில் கண்கலங்கிய குழந்தையிடம் நடிகர் விஜய் வீடியோ காலில் வந்து பேசியுள்ள வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
விஜய் Uncle என்ன பார்க்க வாங்க…?
சமூகவலைத்தளங்களில் ஒரு குழந்தையின் வீடியோ வைரலானது.
அந்த வீடியோவில்
விஜய் Uncle என்ன பார்க்க வரமாட்டீங்களா என்று அந்த குழந்தை தன் அம்மாவிடம் கேட்கிறது. அதற்கு அந்த அம்மா, விஜய் Uncle இந்த வீட்டிற்கெல்லாம் வரமாட்டார்ம்மா.. அவர் பெரிய ஸ்டார்… உடனே அந்த குழந்தை விஜய் Uncle, தளபதி விஜய் Uncle நீங்க வாங்க… என்ன வந்து பாருங்க.. என்று கண்கலங்கி கேட்டது. உடனே அக்குழந்தையின் அம்மா சமாதானப்படுத்தினார்.
வீடியோ காலில் வந்து பேசிய விஜய்
இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலானது. இது குறித்த செய்தி நடிகர் விஜய்யிடம் செல்ல, அவர் இன்று அக்குழந்தையிடமும் மற்றும் அவரது குடும்பத்தினருடன் வீடியோ கால் மூலம் பேசி குழந்தையின் நலம் விசாரித்தார்.
இதோ அந்த வீடியோ நீங்களே பாருங்க…
Thalapathy Talking With This Baby By Video Calling in #Leo Getup 🥵🔥😭😭
— VijayAlif🕶️𝕁𝕕🥃 (@VijayAlif5) March 31, 2023