எலக்ட்ரானிக் பஜார் – உங்கள் பட்ஜெட்டுக்கு ஏற்ற ஸ்மார்ட்போன்கள்
ஆபாசபட நடிகைக்கு தேர்தல் நிதியில் இருந்து பணம் கொடுத்த விவகாரத்தில் டொனால்ட் டிரம்ப் மீது கிரிமினல் குற்றச்சாட்டு உள்ளதால் அவர் அடுத்த வாரம் சரணடைய உள்ளார்.
ஸ்டோர்மி டேனியல்ஸ்
அமெரிக்காவைச் சேர்ந்தவர் ஆபாசபட நடிகை ஸ்டோர்மி டேனியல்ஸ், இவரது இயற்பெயர் ஸ்டெபானி கிளிஃபோர்ட். இந்தநிலையில் அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் ஸ்டோர்மி டேனியல்ஸை கடந்த 2006ம் ஆண்டில் சந்தித்துள்ளார்.
ஸ்டோர்மி டேனியல்ஸின் கூற்றுப்படி, அவர் ஜூலை 2006 இல் ஒரு கோல்ஃப் போட்டியின் போது டொனால்ட் டிரம்பை சந்தித்தார். அப்போது டொனால்ட் டிரம்ப் ரியல் எஸ்டேட் தொழிலதிபர். ஆபாச நட்சத்திரம் ஸ்டார்மி டேனியல்ஸுக்கு அப்போது 27 வயது, டிரம்புக்கு 60 வயது. ஜூலை 2006 இல் கோல்ஃப் போட்டியின் போது ஸ்டோர்மியும் டிரம்பும் சந்தித்தனர்.
பாலியல் நடிகையுடன் ஜல்சா
டிரம்பை சந்தித்தபோது, அவரது மூன்றாவது மனைவி மெலனியாவுக்கு மகன் பரோன் பிறந்தார். பரோன் பிறந்து 4 மாதங்கள்தான் ஆகிறது. டிரம்பின் மெய்க்காப்பாளர்கள் தன்னை ஒரு புதிய நட்சத்திரத்தின் பென்ட்ஹவுஸில் இரவு உணவிற்கு அழைத்ததாக ஸ்டோர்மி கூறினார். டிரம்புடன் தனக்கு இருந்த உறவு மற்றும் அவரது உடல் தோற்றம் குறித்தும் குறிப்பிட்டுள்ளார். இதையடுத்து இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இதை ஸ்டோர்மி டேனியல்ஸ் தனது “முழு வெளிப்படுத்தல்” புத்தகத்தில் எழுதியுள்ளார்.
இந்தசூழலில் கடந்த 2016 அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெறுவதற்கு சில நாட்கள் முன்பு, குடியரசு கட்சியின் அதிபர் வேட்பாளர் டொனால்ட் டிரம்ப், கடந்த காலத்தில் ஆபாசபட பிரபலம் ஸ்டோர்மி டேனியல்ஸுடன் நெருக்கமாக இருந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதிபர் தேர்தல் நடைபெற இருந்த சூழலில் ஆபாசபட நாயகியுடனான பழக்கம் வைரலானது, அது டிரம்பிற்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது.
பணம் கொடுத்த டிரம்ப்
அதைத் தொடர்ந்து ஸ்டோர்மி டேனியல்ஸை பேச விடாமல் இருக்க 1 லட்சத்து 30 ஆயிரம் அமெரிக்க டாலர்கள் டிரம்ப் வழங்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த பணமானது பிரச்சார நிதியில் இருந்து சட்ட விரோதமாக வழங்கப்பட்டதாக ஆட்சி மாறியதும் டிரம்ப் மீது வழக்குகள் தொடரப்பட்டது.
ஸ்டோர்மி டேனியல்ஸ்
போர்ன் பட நாயகியுடனான உறவு விவகாரத்தை டிரம்ப் தொடர்ந்து மறுத்தார். இது குறித்து முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறும்போது, என் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்யானவை. நியூயார்க்கில் நியாயமான விசாரணை நடத்த முடியாது. இது ஜோ பிடனுக்கு கடுமையானதாக இருக்கும் என்றார்.
சரண்டர்
இந்தசூழலில் தேர்தல் நிதி கையாண்டது தொடர்பாக டொனால்ட் ட்ரம்பிற்கு எதிரான ஆவணங்கள் உறுதியாக உள்ளதாகவும், அவர் விரைவில் கைது செய்யப்படுவார் எனவும் டிரம்பே தெரிவித்தது பரபரப்பானது. இந்தநிலையில் அவர் விரைவில் சரண்டர் ஆக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
டொனால்ட் டிரம்ப் அடுத்த வார தொடக்கத்தில் மன்ஹாட்டன் மாவட்ட வழக்கறிஞர் (டிஏ) அலுவலகத்தில் சரணடைவார் என்று அவரது வழக்கறிஞர் ஜோ டகோபினா தெரிவித்தார். நிலைமையை நன்கு அறிந்த பல ஆதாரங்கள், முன்னாள் அமெரிக்க ஜனாதிபதியின் சட்டக் குழு வழக்குரைஞர்களுடன் தொடர்பில் இருப்பதாகவும், அடுத்த வாரம் அவரது விசாரணையும் நடைபெறும் என்று எதிர்பார்ப்பதாகவும் கூறுகின்றனர்.
முதல் அதிபர்
உக்ரைன் போர்; 4 லட்சம் ஒப்பந்த படை வீரர்களுக்கு அழைப்பு; ரஷ்யா வெறி.!
2016 ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னதாக ஆபாச நட்சத்திரமான ஸ்டோர்மி டேனியல்ஸுக்கு பணம் செலுத்தியதாக டொனால்ட் டிரம்ப் மீது நியூயார்க் கிராண்ட் ஜூரி நேற்று இறுதியாக குற்றஞ்சாட்டியது. இதன் மூலம் கிரிமினல் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளும் முதல் அமெரிக்க அதிபர் என்ற பெயரை டொனால்ட் டிரம்ப் பெற்றார்.