சட்டப்பேரவை வளாகத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அதிமுக துணை பொதுச்செயலாளர் கேபி முனுசாமி தெரிவித்தாவது, “கஞ்சா கடத்தல் மற்றும் விற்பனை சம்பந்தமாக 2000க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்ட நிலையில், அதில் தமிழகப் போலீசார் கைது செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பது 148 பேர் மீது தான்.
இது குறித்து தமிழக சட்டப்பேரவைகள் நேற்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் எடுத்து கூறினார். அதற்க்கு அவர் மீது அவதூறு பரப்பும் விதமாக பேசியுள்ளார் அமைச்சர்.
கஞ்சா வழக்குகளில் கைது செய்யப்படாத மற்றவர்கள் யார்? அவர்கள் சமூக விரோதிர்களா? அல்லது திமுகவை சேர்ந்தவர்களே இந்த கஞ்சா விற்பனையை செய்து கொண்டிருக்கிறார்களா? என்று எடப்பாடி பழனிசாமி கேள்வியை எழுப்பியவுடன், திமுக உறுப்பினர்களுக்கு கோபம் வருகிறது.
அந்த கோபத்தின் வெளிப்பாடுதான் நேற்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அவதூறாக பேசியிருக்கிறார். இது மட்டுமல்லாமல் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு கடந்த ஓராண்டு காலத்திற்குள்ளாக 954 கொலைகள் நடந்துள்ளது.
ஒரு நாளைக்கு மூன்று கொலைகள் என்ற விதம் 954 கொலைகள் நடந்துள்ளது. இந்த கொலைகள் அனைத்திற்கும் முக்கிய காரணமாக, பின்னணியில் இருப்பது போதை தான்.
குறிப்பாக கஞ்சா போதையால் தான் இந்த கொலைகள் நடந்துள்ளன. இதைத்தான் எங்களுடைய எதிர்க்கட்சித் தலைவர் கூறினார். இதற்கு பதிலளிக்க முடியாத கோபத்தில் அமைச்சர் எங்கள் தலைவரை பார்த்து அவதூறாக பேசியுள்ளார்” என்று சொன்ன கேபி முனுசாமி தெரிவித்தார்.