சென்னை : வெற்றிமாறனின் விடுதலை திரைப்படம் இன்று வெளியாகி உள்ள நிலையில்,சினிமா பத்திரிக்கையாளரான பயில்வான் ரங்கநாதன் படம் குறித்த விரிவாக அலசி ஆராய்ந்து விமர்சனம் கூறியுள்ளார்.
விடுதலைப்படத்தில் விஜய்சேதுபதி, சூரி, கௌதம் மேனன்,சேத்தன், பவானி ஸ்ரீ மற்றும் பல புதிய முகங்கள் நடித்திருக்கிறார்கள்.
வேல் ராஜ் ஒளிப்பதிவு செய்ய,இசைஞானி இளைராஜா இசையமைத்துள்ளார். கதை,திரைக்கதை, வசனம் எழுதி இயக்கி இருக்கிறார் வெற்றி மாறன்.இப்படத்தை எல்ரன் குமார் தயாரித்துள்ளார். இன்று வெளியாகி உள்ள இப்படத்திற்கு மக்களிடம் இருந்து நல்ல விமர்சனங்கள் வந்துள்ளன.
வெற்றிமாறனின் விடுதலை
பொல்லாதவன், வடசென்னை, அசுரன் போன்ற வெற்றிப்படங்களை கொடுத்த வெற்றிமாறன் மீண்டும் விடுதலை என்ற இடத்தை இயக்கி உள்ளார். சினிமா என்பது பணம் ஈட்டும் தொழிலாக இருந்தாலும், காசு என்பது முக்கியம் அல்ல படம் தான் முக்கியம் என்று நினைக்கக் கூடியவர்களில் வெற்றிமாறனும் ஒருவர். இவருடைய படங்களில் நெட்டிவிட்டி, எதார்த்தம், வாழ்வியல், சமூக விழிப்புணர்வு, புரட்சிகரமான கருத்துக்கள் அதிகமாக இருக்கும்.
நிச்சயம் பிடிக்கும்
அந்தவகையிலே விடுதலை திரைப்படம் சத்யஜித்ரேவிற்கு ஒப்பான படம். இவர் இந்தியாவில் வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள ஏழை எளியவர்களின் வறுமையை படம் பிடித்தார். ஆனால், சத்யஜித்ரேவின் படங்கள் தமிழ் நாட்டில் சரியாக ஓடியது இல்லை வடமாநிலங்களில் மட்டும் தான் ஓடியது. அவரின் படங்கள் பெயர் வாங்கிய அளவுக்கு பணம் ஈட்டவில்லை. சத்யஜித் ரே படத்தை ரசித்தவர்களுக்கு விடுதலை படம் நிச்சயம் பிடிக்கும்.
பதறவைத்த முதல் பத்து நிமிடம்
கதை ஆரம்பிக்கும் போதே ரயிலை குண்டுவைத்து தகர்ந்து ரயிலின் நான்கு, ஐந்த பேட்டிகள் அந்தரத்தில் தொங்குகின்றன. இந்த பத்து நிமிட ஆரம்ப காட்சியிலேயே, இதயத்தை அப்படியே கசக்கி பிழுந்து விட்டார் ஒளிப்பதிவாளர் வேல்ராஜூம் இயக்குநர் வெற்றி மாறனும். மேலும், இந்த படத்தின் கதையில், முதலமைச்சர் யார் என்று காட்டாமலே,தலைமைச் செயலாலரைவைத்தே கதையை நகர்த்தி இருக்கிறார் வெற்றிமாறன்.
சூரியின் எதார்த்த நடிப்பு
மக்கள் படையை பிடிப்பதற்காக அமைக்கப்பட்ட குழுவில், புதிதாக காவலரான சூரி சேர்கிறார். இந்த படத்தின் கதாநாயகனாக நடித்திருக்கும் சூரி, பல காட்சிகளில் டூப்பே இல்லாமல் நடித்துள்ளார். அவரை பார்க்கும் போது நமக்கே, அய்யோ பாவம் என்று நினைக்கும் அளவுக்கு சூரி கடுமையாக உழைத்து இருக்கிறார். மற்றபடி காதல், சோகம் என எதையும் வெளிக்காட்டாமல் எதார்த்தமாக நடித்துள்ளார்.
புரட்சியாளராக விஜய்சேதுபதி
விஜய்சேதுபதி படத்தின் இடைவேளைக்கு சிறிது நேரத்திற்கு முன்தான் வருகிறார். அது மட்டுமில்லாமல் விரல்விட்டு எண்ணக்கூடிய காட்சிகளிலேயே அவர் நடித்துள்ளார். படம் முழுக்க தீவிரவாதம் பற்றி வருகிறது. போலீசாரின் பிடியில் சிக்கி கஷ்டப்பட்டு வரும் மக்களை காப்பாற்றும் புரட்சியாளராக நடித்துள்ள விஜய்சேதுபதி வரும் காட்சியில் பேசும் வசனம் கைத்தட்டலை பெறுகிறது.
இசை படத்திற்கு கூடுதல் பலம்
ஏஆர் ரஹ்மான், அனிருத் என எத்தனை இசையமைப்பாளர்கள் வந்தாலும் எப்பவும் நான் தான் இசைஞானி என்பதை இப்படத்தின் மூலம் மீண்டும் நிரூபித்துள்ளார். இயற்கையான இசை, மனதை நெருடுகிற இசை, வருடுகிற இசையை இளையராஜாவால்தான் கொடுக்க முடியும். இப்படத்தில் வரும் மூன்று பாடல்களும் அப்படியே காதில் ரீங்காமிட்டு செல்கிறது. விடுதலை படத்திற்கு மிகப்பெரிய பலம் இளையராஜாவின் இசை.