டெல்லியில் கொசுவர்த்தி சுருளால் மூச்சுத்திணறல் 6 பேர் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொசுவர்த்தி சுருளால் மூச்சுத்திணறி 6 பேர் பலி
டெல்லியில் உள்ள சாஸ்திரி பார்க் பகுதியில் கொசு அதிகமாக இருந்ததால் கொசுவர்த்தி சுருளை எரித்துள்ளனர். அதிலிருந்து வெளியான கார்பன் மோனாக்சைடு வாயுவால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு ஒரு குழந்தை உட்பட, ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் உயிரிழந்துள்ளனர்.
உடனே போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இது குறித்து டெல்லியின் வடகிழக்கு மாவட்ட டிசிபி பேசுகையில், பாதிக்கப்பட்டவர்கள் இரவு முழுவதும் கொசு விரட்டி சுருளுடன் காற்றோட்டம் இல்லாமல் மூடிய அறையில் தூங்கியுள்ளனர். அவர்கள் தூங்கும் போது கொசு விரட்டியிலிருந்து வெளியான கார்பன் மோனாக்சைடை சுவாசித்ததால் அவர்கள் உயிரிழந்துள்ளதாக தெரிவித்தார்.