அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் செல்லும் என சென்னை உயர் நீதிமன்ற தனி நீதிபதி பிறப்பித்த தீர்ப்பை எதிர்த்து
உள்ளிட்டோர் மேல்முறையீடு செய்திருந்தனர். இந்த வழக்கு இரண்டு நாட்களாக தள்ளி வைக்கப்பட்டு வந்த நிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. நீதிபதிகள் மகாதேவன், முகமது ஷாஃபிக் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது.
இறுதி விசாரணைக்கு ரெடி
அப்போது, வழக்கை நேரடியாக இறுதி விசாரணைக்கு எடுத்து வாதங்களை கேட்டு உத்தரவு பிறப்பிக்க அனைத்து தரப்புக்கும் சம்மதமா? என நீதிபதிகள் கேள்விகள் எழுப்பினர். இந்த சூழலில் எங்களுக்கு இடைக்கால நிவாரணம் வழங்க வேண்டும். கட்சியில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் நீக்கப்பட்ட நடவடிக்கை அனைத்து விதிகளுக்கும் எதிரானது.
இடைக்கால நிவாரணம்
ஏற்கனவே இடைக்கால நிவாரணம் வழங்கப்பட்டிருந்தால் பொதுச் செயலாளர் தேர்தலில் போட்டியிட்டிருக்க முடியும் என்று ஓபிஎஸ் தரப்பு வாதத்தை முன்வைத்தது. மேலும் ஈரோடு கிழக்கு வேட்பாளரை தேர்வு செய்ய எங்களை உச்ச நீதிமன்றம் அனுமதித்தது. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஆகிய பதவிகளை தான் தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது எனக் குறிப்பிட்டனர்.
பொ.செ பதவி மட்டுமே
உடனே
தரப்பு வாதிடுகையில், அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர் பதவிகள் இல்லை. பொதுச் செயலாளர் பதவி மட்டுமே உள்ளது. அடுத்தாண்டு மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது. எனவே கட்சி, தொண்டர்களை தயார்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது. அதை கருத்தில் கொண்டே பொதுச் செயலாளர் தேர்தல் நடத்தப்பட்டது.
ஓபிஎஸ்க்கு ஆதரவு இல்லை
தற்போது அதிமுகவில் 95 சதவீதம் பேர் எடப்பாடி பழனிசாமி தலைமையை ஏற்றுள்ளனர். பொதுச் செயலாளர் தேர்தலில் போட்டியிட ஒரு வேட்பாளருக்கு 10 மாவட்ட செயலாளர்களின் ஆதரவு தேவை. அப்படி பார்த்தால் ஓ.பன்னீர்செல்வத்திற்கு மாவட்ட செயலாளர்கள் ஆதரவு இல்லை. சட்டமன்றத்திலும் ஓ.பன்னீர்செல்வம் இருக்கையை மாற்றக் கோரி சபாநாயகரிடம் கோரிக்கை வைத்துள்ளோம்.
மா.செ.,க்கள் ஆதரவு
வழக்கை நேரடியாக இறுதி விசாரணைக்கு எடுக்க தயார் என்று தெரிவித்தனர். அதற்கு, எங்கள் தரப்பிற்கு மாவட்ட செயலாளர் ஆதரவு இல்லை என எப்படி கூறுவீர்கள்? என்று ஓ.பன்னீர்செல்வம் தரப்பு கேள்வி எழுப்பியது. இந்த சூழலில் நேரடியாக இறுதி விசாரணைக்கு நாங்களும் தயார் என ஓ.பன்னீர்செல்வம் தரப்பும் தெரிவித்தது. இந்நிலையில் இரு தரப்பும் அனைத்து ஆவணங்களையும் தாக்கல் செய்யுங்கள்.
ஏப்ரல் 3ஆம் தேதி உத்தரவு
வரும் ஏப்ரல் 3ஆம் தேதி விசாரித்து உத்தரவு பிறப்பிக்கிறோம் என்று இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு தெரிவித்துள்ளது. இந்நிலையில் ஓபிஎஸ்க்கு இடைக்கால நிவாரணம் எதுவாக இருக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது. மீண்டும் கட்சியில் சேர்க்கப்பட்டு சாதாரண தொண்டனாக பணியாற்ற வாய்ப்பு வழங்கப்படுவது சாத்தியம் இல்லை என்றே தெரிகிறது. ஏனெனில் தலைமை பொறுப்பில் இருந்த ஓபிஎஸ்க்கு அப்படி ஒரு உத்தரவு பிறப்பிக்க முடியாது.
தற்போதைய சூழலில் அதிமுக பொதுச் செயலாளராக பதவி வகிக்கும் எடப்பாடி பழனிசாமியை மாற்ற முடியாது. அதற்கான உரிமை தேர்தல் ஆணையத்தில் தான் இருக்கிறது. எனவே ஏப்ரல் 3ஆம் தேதி இறுதி விசாரணையில் ஓபிஎஸ்க்கு இடைக்கால நிவாரணம் எதுவும் கிடைக்காது. பிரதான வழக்கில் பார்த்துக் கொள்ளலாம் என நீதிமன்றம் உத்தரவிட அதிக வாய்ப்புகள் இருப்பதாக அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.