மும்பை: சூப்பர் ஸ்டார் ரஜினி தற்போது ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார்.
இதனைத் தொடர்ந்து லால் சலாம், தலைவர் 170 ஆகிய படங்களில் நடிக்கவுள்ளார்.
இந்நிலையில், நீட்டா அம்பானியின் கல்ச்சுரல் சென்டர் திறப்பு விழாவிற்காக தனது மகள் செளந்தர்யாவுடன் மும்பை சென்றுள்ளார் ரஜினிகாந்த்.
அப்போது ரஜினி புதிய லுக்கில் எடுத்துக்கொண்ட ஸ்டைலான போட்டோவை அவரது மகள் செளந்தர்யா ட்விட்டரில் ஷேர் செய்துள்ளார்.
மும்பையில் ரஜினி
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கடந்த சில மாதங்களாக ஜெயிலர் படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். இதனைத் தொடர்ந்து த செ ஞானவேல் இயக்கும் தலைவர் 170 படத்தில் ஹீரோவாக நடிக்கவுள்ளார். மேலும், அவரது மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் லால் சலாம் படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடிக்கிறார். அடுத்தடுத்து படப்பிடிப்பு இருந்தாலும் பல நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்டு வருகிறார். இந்நிலையில், தற்போது மும்பை பறந்துள்ளார் ரஜினி.
மிரட்டும் புது லுக்
நீட்டா அம்பானியின் கல்ச்சுரல் சென்டர் திறப்பு விழாவில் தனது மகள் செந்தர்யாவுடன் கலந்துகொண்டுள்ளார். அப்போது ரஜினியும் அவரது மகள் செளந்தர்யாவும் எடுத்துக்கொண்ட போட்டோ இணையத்தில் வைரலாகி வருகிறது. புதிய லுக்கில் மிரட்டலாக இருக்கும் ரஜினி செம்ம ஸ்டைலாக போஸ் கொடுத்துள்ளார். இன்னும் இளமை மாறாமல் கெத்தாக தனது மகளுடன் போஸ் கொடுத்துள்ள ரஜினிக்கு, ரசிகர்கள் டிவிட்டரிலியே திருஷ்டி சுத்தி போட்டு வருகின்றனர்.
நியூ லுக் செம்ம தலைவா
இந்த புகைப்படங்களை தனது டிவிட்டரில் ஷேர் செய்துள்ள செளந்தர்யா ரஜினிகாந்த், மும்பையில் இருப்பதாகவும், நியூ லுக் செம்ம தலைவா எனவும் கேப்ஷன் கொடுத்துள்ளார். மேலும் தலைவர் நியூ லுக் என அவர் குறிப்பிட்டுள்ளதை ரசிகர்களும் ட்ரெண்ட் செய்து வருகின்றனர். இந்த போட்டோவில் கறுப்பு பேண்ட், கறுப்பு டீ சர்ட்டில் ஸ்மார்ட்டாக இருக்கிறார் ரஜினி.
ஜெயிலர் ரிலீஸ்
ரஜினியின் ஜெயிலர் திரைப்படம் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர். நெல்சன் இயக்கி வரும் இந்தப் படம் ஆகஸ்ட் அல்லது தீபாவளிக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜெயிலர் ஷூட்டிங் முடிந்ததும் உடனடியாக தலைவர் 170 படப்பிடிப்பில் கலந்துகொள்ள முடிவு எடுத்துள்ளாராம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.