தீபிகா படுகோனின் ஜிம் மேட்டாக மாறிய ஐஸ்வர்யா மேனன்
காதலில் சொதப்புவது எப்படி, தமிழ் படம் 2 உள்ளிட்ட படங்களிலும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியான தமிழ் ராக்கர்ஸ் வெப் சீரிஸிலும் நடித்து தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் ஐஸ்வர்யா மேனன். தற்போது தெலுங்கில் ஸ்பை என்கிற படத்தில் நடித்துள்ளார். இந்த நிலையில் சமீபத்தில் பாலிவுட் முன்னணி நடிகை தீபிகா படுகோனுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்றை தனது சோசியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டுள்ளார் ஐஸ்வர்யா மேனன்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், ‛‛முதல் முறையாக ஒரு பெண்ணுடன் நான் காதலில் விழுந்த தருணம்'' என்றும் கூறியுள்ளார். மும்பையில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சென்றிருந்தபோது அங்கிருந்து ஜிம்மில் தான் தீபிகா படுகோனை சந்தித்து இந்த புகைப்படத்தை எடுத்துக் கொண்டுள்ளார் ஐஸ்வர்யா மேனன்.