வங்கதேசத்திற்கு தரமான பதிலடி! பந்தாடிய பந்துவீச்சாளர்கள்



வங்கதேசத்திற்கு எதிரான கடைசி டி20 போட்டியில், அயர்லாந்து அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் ஆறுதல் வெற்றி பெற்றது.

தடுமாறிய வங்கதேசம்

அயர்லாந்து – வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான கடைசி டி20 போட்டி சாட்டோகிராமில் நடந்தது.

முதலில் ஆடிய வங்கதேசம் 124 ஓட்டங்களுக்கு ஆல் அவுட் ஆனது.

அதிகபட்சமாக ஷமிம் ஹொசைன் 51 (42) ஓட்டங்கள் விளாசினார்.

பந்துவீச்சில் மிரட்டிய அயர்லாந்தின் மார்க் அடைர் 3 விக்கெட்டுகளையும், மேத்யூ ஹம்பரேஸ் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

ஸ்டிர்லிங் அதகளம்

அதன் பின்னர் களமிறங்கிய அயர்லாந்து 14 ஓவர்களிலேயே 3 விக்கெட்டுகளை இழந்து 126 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது. பால் ஸ்டிர்லிங் 41 பந்துகளில் 4 சிக்ஸர், 10 பவுண்டரிகளுடன் 77 ஓட்டங்கள் குவித்தார்.

ஏற்கனவே தொடரை இழந்த அயர்லாந்து அணிக்கு இது ஆறுதல் வெற்றியாக அமைந்தது. இரு அணிகளுக்கு இடையிலான ஒரே ஒரு டெஸ்ட் போட்டி ஏப்ரல் 4ஆம் திகதி நடக்க உள்ளது.    





Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.