எலக்ட்ரானிக் பஜார் – உங்கள் பட்ஜெட்டுக்கு ஏற்ற ஸ்மார்ட்போன்கள்
பாகிஸ்தானில் இலவச ரேஷன் பொருட்களை வாங்கச்சென்ற 11 பேர் கூட்டநெரிசலில் சிக்கி உயிரிழந்துள்ளனர்.
பாகிஸ்தான்
அண்டை நாடான பாகிஸ்தானில் கடும் பொருளாதார நெருக்கடி நிலவி வருகிறது. இலங்கை போல் பாகிஸ்தானும் திவாலாகும் சூழலில் உள்ளதாக பொருளாதார நிபுணர்கள் கணித்துள்ளனர். இருநாடுகளுக்கும் இருக்கும் ஒற்றுமை பெரும்பான்மைவாதம் தான். இலங்கையில் பவுத்தர்களே முதன்மையானவர்கள் மற்றவர்கள் எல்லாம் தங்கள் கீழ் தான் என பொது சமூகம் பேசிவரும் நிலையில், அதே நிலைப்பாட்டைத்தான் பாகிஸ்தான் எடுத்துள்ளது. இஸ்லாமிய பெரும்பான்மைவாத அரசாக பாகிஸ்தான் தன்னை அறிவித்துள்ளது.
பாதுகாப்பு அமைச்சரின் கருத்து
அதேபோல் பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப் கூறும்போது, ‘‘பயங்கரவாதத்தை பாகிஸ்தான் தனது மண்ணில் விதைத்துள்ளது. இந்தியாவிலோ அல்லது இஸ்ரேலிலோ தொழுகையின் போது வழிபாட்டாளர்கள் கொல்லப்பட்டதில்லை, ஆனால் அது பாகிஸ்தானில் நடந்துள்ளது.
நான் நீண்ட நேரம் பேசமாட்டேன், ஆனால் ஆரம்பத்தில் நாம் பயங்கரவாதத்தை விதைத்தோம் என்பதை சுருக்கமாகச் சொல்கிறேன். பெஷாவர் மசூதி வெடிப்புக்கு யார் பொறுப்புக் கூறுவார்கள். தீவிரவாதம் எந்த மதத்தையும் பிரிவையும் வேறுபடுத்துவதில்லை. விலைமதிப்பற்ற உயிர்களைப் பறிக்க மதத்தின் பெயரால் பயங்கரவாதம் பயன்படுத்தப்படுகிறது என்று அவர் கூறினார்.
பொருளாதார நெருக்கடி
பணவீக்கம் அதிகரிப்பு, அந்நியச் செலாவணி கையிருப்பில் வீழ்ச்சி, சமீபத்திய வெள்ளம் ஆகியவை பாகிஸ்தானுக்கு மிகப்பெரிய நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. அதிலும் குறிப்பாக, பாகிஸ்தானின் எரிசக்தி துறையின் கடன் சுமை தாங்கமுடியாத அளவுக்கு உயர்ந்துள்ளது. பொருளாதர அந்த நாட்டின் அன்றாட வாழ்கை முறையை புரட்டிப்போட்டுள்ளது. அத்தியாவசிய மருந்துகளுக்கு கூட கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
பிட்டு பட நடிகைக்கு பணம்.. மாட்டிக்கொண்ட டொனால்ட் டிரம்ப்.. விரைவில் கைது.!
அல்லாவே காரணம்
பாகிஸ்தானின் பொருளாதார நெருக்கடிக்கு அல்லாவே (இஸ்லாமியர்களின் இறைத்தூதர்) காரணம் என அந்நாட்டின் நிதித்துறை அமைச்சர் இஷாக் தார் தெரிவித்ததும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இது குறித்து அவர் கூறும்போது, ‘‘பாகிஸ்தான் எனும் நாட்டை அல்லா உருவாக்கி இருக்கும் பட்சத்தில், பொருளாதார நெருக்கடிக்கு அவரே கடமைபட்டுள்ளார். நாட்டை மேம்படுத்துவதும், முன்னேற்றுவதும் அல்லாவின் பணி.
அச்சச்சோ இந்த நோயா.?.. இளம்பெண்களே உஷார்.. அரிய வகை நோய் பராக்.!
பொருளாதார நெருக்கடியை சமாளிக்க அல்லாவின் கருணையால் தற்போதைய இந்த அரசு கவனமாக செயல்பட்டு வருகிறது. கடந்த 5 ஆண்டுகால டிராமா ஆட்சியின் விளைவுதான் இத்தகைய துன்பம்’’ என அவர் தெரிவித்தார்.
பிரதமரின் ஒப்புதல் வாக்குமூலம்
அதேபோல் பொருளாதார நிலை குறித்து பேசிய பிரதமர், ‘‘நான் விவரங்களுக்குச் செல்லவில்லை, ஆனால் நமது பொருளாதார சவால் கற்பனை செய்ய முடியாதது என்று மட்டுமே கூறுவேன். சர்வதேச நாணய நிதியத்துடன் நாம் உடன்பட வேண்டிய நிபந்தனைகள் கற்பனைக்கு அப்பாற்பட்டவை. ஆனால் நிபந்தனைகளுக்கு நாம் உடன்பட வேண்டும்’’ என அவர் தெரிவித்தார்.
கடும் பஞ்சம்
இந்தநிலையில் பாகிஸ்தானின் தெற்கு நகரமான கராச்சியில் இன்று இலவச ரேஷன் விநியோக இயக்கத்தின் போது ஏற்பட்ட நெரிசலில் பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட குறைந்தது 11 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் பலர் காயமடைந்தனர். ரேஷன் விநியோக மையத்தில் ஏற்பட்ட நெரிசலில் பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட பலர் மயங்கி விழுந்தனர் என்று பாகிஸ்தானின் எக்ஸ்பிரஸ் செய்தி செய்தி வெளியிட்டுள்ளது.