கர்நாடகாவில் Edupress group நடத்திய கருத்து கணிப்பில், மாநிலத்தில் பாஜக மீண்டும் ஆட்சியமைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கர்நாடகா தேர்தல்
கர்நாடகா மாநிலத்தில் வருகிற மே 10ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 224 தொகுதிகளைக் கொண்ட கர்நாடகாவில் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்பட்டு மே 13ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
மும்முனை போட்டி
ஆளும் பாஜக, முக்கிய எதிர்கட்சியான காங்கிரஸ் மற்றும் குறைந்த தொகுதிகளை கைப்பற்றினாலும் கிங் மேக்கராக செயல்படும் குமாரசாமியின் ஜனதா தளம் ஆகிய கட்சிகளுக்கு இடையே கர்நாடகா தேர்தலில் மும்முனை போட்டி நிலவி வருகிறது. இந்த போட்டியில் ஆம் ஆத்மி கட்சியின் அரவிந்த கெஜ்ரிவால் இணைந்தாலும், முதன்முறையாக போட்டியிடும் அவருக்கு மாநிலத்தில் ஆட்சியை கைப்பற்றும் அளவிற்கு செல்வாக்கு இல்லை என்றே கூறப்படுகிறது.
பின் தங்கிய பாஜக
ஆளும் பாஜக அரசுக்கு எதிரான பல்வேறு கூறுகள் தேர்தலில் எதிரொலிக்கும் எனக்கூறப்படுகிறது. அரசு டெண்டர் ஒப்பந்த பணிகளுக்கு 40 சதவிகித கமிசன், ஹிஜாப் விவகாரம், வேலை வாய்ப்பின்மை, தலித்துகளுக்கு எதிரான வன்முறை, முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு ரத்து, வேலைவாய்ப்பின்மை, அத்தியாவசிய பொருட்களின் விலை ஏற்றம், ஊழல் என பெரும்பான்மை மக்களை பாதிக்கும் பல்வேறு பிரச்சனைகள் கர்நாடகா தேர்தலில் முக்கிய காரணியாக உள்ளது.
கருத்து கணிப்புகள் சொல்வது என்ன.?
கர்நாடகாவில் கடந்த முறை போலவே இந்தமுறையில் தொங்கு சட்டசபை அமையும் என கூறப்படுகிறது. கர்நாடகா டிவி நடத்திய கருத்துக்கணிப்பு முடிவுகளின் படி, பாஜக 107, காங்கிரஸ் 75, மதச்சார்பற்ற ஜனதா தளம் 36, மற்றவை 6 என வெற்றி பெறக் கூடும் என கூறப்பட்டுள்ளது.
வேணுகோபால சுவாமி கோயிலில் பயங்கர தீ; ஸ்ரீராம நவமி கொண்டாட்டத்தில் அதிர்ச்சி!
கடந்த முறை எந்தவொரு கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதாதளம் ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்தன. மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் தலைவர் குமாரசாமி முதலமைச்சராக பதவி ஏற்றார். அதேபோல் இந்த முறையும் தொங்கு சட்டசபை அமையும் எனவும், காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கூட்டணி அமைக்கும் என்பது உறுதியாகியுள்ளது.
வெற்றி வாகை சூடும் பாஜக
இந்நிலையில், Edupress group கர்நாடகாவின் 50 தொகுதிகளைச் சேர்ந்த 18,331 வாக்காளர்களிடம் கருத்துக்கணிப்பை நடத்தியது. அந்தவகையில் கடந்த மார்ச் 25 முதல் 30ஆம் தேதி வரை நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின் அடிப்படையில், பாஜக 110-120 இடங்களிலும், காங்கிரஸ் கட்சி 70-80 இடங்களிலும், மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி 10-15 இடங்களையும் மற்றவை 4-9 இடங்களையும் கைப்பற்றக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற தேர்தல் 2024: மம்தா பானர்ஜியின் திடீர் மாற்றம்; பாஜகவிற்கு சம்மட்டி அடி.!
இந்தக் கருத்துக் கணிப்பின் முடிவில் கர்நாடகாவில் மொத்த வாக்குகளில் பாஜக 43 சதவீத வாக்குகளையும், காங்கிரஸ் கட்சி 37 சதவீத வாக்குகளையும் பெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் கருத்துக்கணிப்பு பற்றிப் பேசியுள்ள Edupress group தலைவரும் கருத்துக்கணிப்பு ஆய்வாளருமான ஜார்ஜ்குட்டி, தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள இந்த சமயத்தில் பாஜக, காங்கிரஸை அதிக சீட்களைக் கைப்பற்றுவதாகத் தெரிகிறது. ஏப்ரல் முதல் வாரத்தில் மீண்டும் கருத்துக்கணிப்பை நடத்துவோம் எனத் தெரிவித்துள்ளார்.