புதுடெல்லி: வடகிழக்கு டெல்லியின் சாஸ்திரி பூங்கா பகுதியில், ஒரு வீட்டில் தீ விபத்து ஏற்பட்டது அங்கு 9 பேர் மயக்கமடைந்து உயிருக்கு போராடினர். இதில் 6 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். மற்ற மூன்று பேருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டது. போலீசார் நடத்திய விசாரணையில் இரவில் தூங்கும்போது கொசுவை விரட்டுவதற்காக ஏற்றி வைத்த கொசுவர்த்தி சுருள் படுக்கையின் மீது கவிழ்ந்து விழுந்து தீ பற்றியது தெரியவந்தது.