கொழும்பில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு குடும்பஸ்தர் பலி


முச்சக்கரவண்டியில் வந்த  அடையாளம் தெரியாத சிலர், குடும்பஸ்தர் ஒருவரைக் கூரிய ஆயுதங்களால்
தாக்கிக் கொலை செய்துள்ளனர்.

இந்தச் சம்பவம் கொழும்பு – மட்டக்குளியில் இன்று (31.03.2023) இடம்பெற்றுள்ளது என்று
பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்தில் அப்பகுதியைச் சேர்ந்த 39 வயதுடைய மொஹமட் சுதுர் மொஹமட் இர்பாட்
என்பவரே உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த நபரை அவரது வீட்டின் முன் வைத்து தாக்கிவிட்டுச் சந்தேகநபர்கள்
தப்பிச் சென்றுள்ளனர்.

இதில் பலத்த காயமடைந்த நபர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டதன்
பின்னர் உயிரிழந்துள்ளார்.

கொழும்பில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு குடும்பஸ்தர் பலி | Family Man Murder In Colombo

குடும்பஸ்தர் மீது தனிப்பட்ட குரோதம்

தனிப்பட்ட குரோதம் காரணமாக இந்தக் கொலை இடம்பெற்றுள்ளது எனத்
தெரியவந்துள்ளதுடன், கொலை மேற்கொண்டவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்றும்
பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேகநபர்களைக் கைது செய்ய விசேட பொலிஸ் குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது
என்றும் மட்டக்குளி பொலிஸ் நிலையத்தின் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி
தெரிவித்துள்ளார்.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.