காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ரஞ்சித்குமார். இவர் சென்னையை அடுத்த செம்மஞ்சேரி பகுதியைச் சேர்ந்த கவுசல்யா என்பவரை காதலித்து வந்துள்ளார். நாளடைவில் இருவரும் மிக நெருக்கமாகப் பழகி வந்துள்ளனர்.
இதற்கிடையே கவுசல்யா கர்ப்பமாகியுள்ளார். இந்த நிலையில், கவுசல்யாவிற்குக் கடந்த சில மாதங்களுக்கு முன்பு குழந்தை பிறந்துள்ளது. இதையடுத்து கவுசல்யாவின் பெற்றோர் அவரைத் தனது வீட்டிற்கு அழைத்துச் சென்றனர்.
இதையடுத்து நேற்று ரஞ்சித்குமார் கவுசல்யாவின் வீட்டிற்கு சென்று, அவரை தனது வீட்டிற்கு வருமாறு அழைத்துள்ளார். அதற்கு கவுசல்யா மறுப்புத் தெரிவித்துள்ளார். இதைக்கேட்டு ஆத்திரமடைந்த ரஞ்சித்குமார் அவரை சரமாரியாகத் தாக்கியுள்ளார்.
இதில், காயம் அடைந்த கவுசல்யாவை அவரது பெற்றோர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அந்த நேரத்தில் வீட்டிலிருந்த இரண்டு மாத கைக்குழந்தையின் காலை பிடித்து ரஞ்சித்குமார் சுவரில் தூக்கி வீசியுள்ளார். இதனால், குழந்தையின் விலா எலும்புகள் உடைந்து குழந்தை பரிதாபமாக உயிரிழந்துள்ளது.
இந்த சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம்பக்கத்தினர் சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸார் ரஞ்சித் குமாரைக் கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களுக்கு அதிர்ச்சியையும் பரப்பரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.