PSG அணியில் இருந்து வெளியேறும் லியோனல் மெஸ்ஸி: உறுதி செய்த நிர்வாகிகள்


அர்ஜென்டினா கால்பந்து நட்சத்திரம் லியோனல் மெஸ்ஸி மீண்டும் பார்சிலோனா அணிக்கு திரும்புவது உறுதியாகியுள்ளது.

வீடு திரும்புங்கள் மெஸ்ஸி

பார்சிலோனா அணியின் தற்போதைய மேலாளரான ஜாவி இது தொடர்பில் குறிப்பிடுகையில், மிக விரைவில் வீடு திரும்புங்கள் என மெஸ்சியிடம் கேட்டுக்கொண்டதாக தெரிவித்துள்ளார்.

PSG அணியில் இருந்து வெளியேறும் லியோனல் மெஸ்ஸி: உறுதி செய்த நிர்வாகிகள் | Barcelona Confirm Lionel Messi Transfer

@getty

கடந்த 2021 ஆகஸ்டு மாதம் மெஸ்ஸி PSG அணியில் இணைந்தார்.
கால்பந்து களத்தில் அறிமுகமானது முதல், நீண்ட காலம் இணைந்திருந்த பார்சிலோனா அணியில் இருந்து வெளியேறி மெஸ்ஸி PSG அணியில் இணைந்தார்.

பொருளாதார ரீதியாக தமது கோரிக்கையை பார்சொலோனா நிர்வாகம் ஏற்க மறுத்தத்தை அடுத்தே, அந்த கடுமையான முடிவை மெஸ்ஸி எடுத்தார்.
ஆனால், மெஸ்ஸி எப்போது வேண்டுமானாலும் பார்சிலோனா அணிக்கு திரும்பலாம் எனவும், அவரை ஏற்க தாம் காத்திருப்பதாகவும் அந்த அணியின் தலைவர் Joan Laporta தொடர்ந்து கூறிவந்தார்.

PSG அணியில் இருந்து வெளியேறும் லியோனல் மெஸ்ஸி: உறுதி செய்த நிர்வாகிகள் | Barcelona Confirm Lionel Messi Transfer

@PA

இதனிடையே, மெஸ்ஸியின் தந்தையும் பார்சிலோனா நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட தகவல் வெளியானது.
இந்த நிலையில், மெஸ்ஸி மீண்டும் பார்சிலோனா அணிக்காக களமிறங்க இருப்பதை துணைத் தலைவர் ரஃபா யுஸ்டே உறுதிப்படுத்தியுள்ளார்.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.