தமிழகத்தில் இன்று 8 இடங்களில் வெயில் சதமடித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு பகுதிகளில் அனல் காற்றுடன் வெயில் சுட்டெரித்து வருகிறது. மேலும் தென் இந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு நிசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுவதால் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்து வருகிறது.
இந்நிலையில் தமிழகத்தில் இன்று 8 இடங்களில் வெயில் சதம் அடித்துள்ளது. இதில் திருப்பத்தூர், தஞ்சாவூர், பாளையங்கோட்டை, நாமக்கல், மதுரை, கரூர், ஈரோடு, கோவை ஆகிய பகுதிகளில் 100 டிகிரி டிகிரி பாரன்ஹீட்டாக பதிவாகியுள்ளது. சுட்டெரித்த வெயில் காரணமாக இருசக்கர வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தனர். இதில் வேலூரில் இன்று 100.4 டிகிரி பாரன்ஹீட் அளவுக்கு வெயில் பதிவானது குறிப்பிடத்தக்கது.