போபால் – டெல்லி இடையேயான 11வது வந்தே பாரத் ரயிலை பிரதமர் மோடி இன்று கொடியசைத்துத் தொடங்கி வைக்கிறார்.
மத்தியப் பிரதேசத்துக்கு வருகை தரும் பிரதமர் மோடி, ராணி கம்லாபதி ரயில் நிலையத்தில் வந்தே பாரத் ரயிலை துவக்கி வைக்கிறார். 708 கிலோ மீட்டர் தூரத்தை இந்த ரயில் 8 மணி நேரத்திற்குள் சென்றடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
போபாலில் உள்ள குஷாபாவ் தாக்ரே ஹாலில் காலை 10 மணிக்கு நடைபெறும் ஒருங்கிணைந்த ராணுவத் தளபதிகள் மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்று, முப்படைத் தளபதிகளுடன் பாதுகாப்பு தொடர்பாக ஆலோசனை நடத்த உள்ளார். பிரதமரின் வருகையையொட்டி போபாலில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.