ஏப்ரல் முதல் நாளே சூப்பர் செய்தி: அதிரடியாக குறைந்தது கேஸ் சிலிண்டர் விலை

வணிக பயன்பாடு எரிவாயு சிலிண்டர் விலை குறைப்பு: இன்று (ஏப்ரல் 1ம் தேதி) புதிய நிதியாண்டின் தொடக்கத்தில் அரசு பெரிய பரிசை வழங்கியுள்ளது. எல்பிஜி சிலிண்டர்களின் விலை குறைந்துள்ளது. வணிக பயன்பாடு எல்பிஜி சிலிண்டர்களின் விலையை அரசு குறைத்துள்ளது. வணிக பயன்பாடு சிலிண்டர் விலை ரூ.91.50 குறைக்கப்பட்டுள்ளது. புதிய கட்டணங்கள் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளன. இதனால் மக்களுக்கு பெரிய அளவிலான நிம்மதி கிடைத்துள்ளது.

கடந்த மாதம்தான் வணிக பயன்பாடு சிலிண்டர் விலை ரூ.350 அதிகரித்தது. தற்போது இது ரூ.91.50 குறைக்கப்பட்டுள்ளது. இது தவிர, வீட்டு உபயோக எல்பிஜி சிலிண்டர் விலையில் எந்த மாற்றமும் இல்லை. வீட்டு எல்பிஜி சிலிண்டருக்கு, நீங்கள் முன்பு செலுத்திய அதே தொகையைதான் இப்போதும் நீங்கள் செலுத்த வேண்டும்.

இன்று, ஏப்ரல் 1ஆம் தேதி முதல் வணிக பயன்பாடு சிலிண்டரின் விலை டெல்லியில் ரூ.2028 ஆகவும், கொல்கத்தாவில் ரூ.2132 ஆகவும், மும்பையில் ரூ.1980 ஆகவும், சென்னையில் ரூ.2192.50 ஆகவும் உயர்ந்துள்ளதாக இந்தியன் ஆயில் நிறுவனத்தின் இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக இதன் விலை டெல்லியில் ரூ.2119.50 ஆகவும், கொல்கத்தாவில் ரூ.2221.50 ஆகவும், மும்பையில் ரூ.2071.50 ஆகவும் இருந்தது. வணிக பயன்பாடு எல்பிஜி சிலிண்டர்களின் விலை குறைக்கப்பட்டுள்ளது.

வீட்டு உபயோக எல்பிஜி சிலிண்டர்களின் விலையில் எந்த மாற்றமும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. நாட்டின் தலைநகர் டெல்லியில் 14.2 கிலோ வீட்டு உபயோக எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.1,103 ஆகும். சென்னையில் இதன் விலை ரூ.1118.50 ஆகவும், கொல்கத்தாவில் ரூ.1,129 ஆகவும், மும்பையில் வீட்டு உபயோக காஸ் சிலிண்டரின் விலை ரூ.1102.50 ஆகவும் உள்ளதாக இந்தியன் ஆயில் நிறுவனத்தின் இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

நாட்டின் முக்கிய நகரங்களில் வீட்டு உபயோக கேஸ் சிலிண்டரின் விலை பட்டியல் இதோ:

டெல்லி – 1 ,103
கொல்கத்தா – 1,129
மும்பை – 1102.50
சென்னை – 1118.50
ஸ்ரீநகர் – 1219
பாட்னா – 1201
ஐஸ்வால் – 1255
அகமதாபாத் – 1110
போபால் – 1118.50
ஜெய்ப்பூர் – 1116.50
ராஞ்சி – 1160.50
பெங்களூரு – 1115.50

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.