இன்று திருவாரூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு மாவட்டங்களிலும் கோவில் திருவிழாக்கள், சிறப்பு பண்டிகை மற்றும் சுதந்திரப் போராட்ட வீரர்களின் நினைவு தினங்கள் உள்ளிட்ட முக்கிய தினங்களை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை வழங்கப்பட்டு வருகிறது.
திருவாரூர் மாவட்டத்தில், சைவ சமயத்தின் தலைமை பீடமாகவும், சர்வதோஷ பரிகார தலமாகவும் விளங்கும் தியாகராஜர் கோவிலில் ஆழித்தேரோட்டம் உலக புகழ் பெற்றது.
இந்தக் கோவிலில் ஒவ்வொரு வருடமும் பங்குனி உத்திர திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக ஆழித்தேரோட்டம் நடைபெற்று வருகிறது. அதன்படி இந்த ஆண்டு தேரோட்ட விழாவிற்கான பந்தல்கால் முகூர்த்தம் தைப்பூச நாளில் நடைபெற்றது.
இதைத்தொடர்ந்து மார்ச் 9ம் தேதி பங்குனி உத்திர தேரோட்டத்திற்கான கொடியேற்ற நிகழ்ச்சி சிவாச்சாரியார்களின் வேத மந்திரங்களுடன், மங்கள இசை முழங்க கொடியேற்றம் நடைபெற்றது.
இந்தக் கொடியேற்றத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதைத் தொடர்ந்து இந்த விழாவின் மிக முக்கிய நிகழ்ச்சியான ஆழித்தேரோட்டம் இன்று (ஏப்ரல் மாதம் 1-ந் தேதி) நடைபெற உள்ளது.
இந்த நிலையில் திருவாரூர் ஆழித்தேரோட்டத்தை முன்னிட்டு வரும் இன்று (ஏப்ரல் 1ம் தேதி) திருவாரூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.