போபால் – டெல்லி இடையே 11வது வந்தே பாரத் ரயிலை தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி.. குறைகிறது பயண நேரம்

போபால்: நாட்டின் 11வது வந்தே பாரத் ரயிலை மத்திய பிரதேசத்தின் போபாலிருந்து பிரதமர் நரேந்திர மோடி இன்று கொடியசைத்து தொடக்கி வைக்கிறார். இந்த ரயில் டெல்லி வரை இயக்கப்படுகிறது.

சாதாப்தி ரயிலுக்கு பதிலாக அறிமுகப்படுத்தப்பட்ட ‘வந்தே பாரத்’ எதிர்பார்த்த வரவேற்பை பெற்றுள்ள நிலையில், பல்வேறு வழித்தடங்களில் இந்த ரயில்களை இயக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்தியாவில் ரயில் சேவை உருவாக்கப்பட்ட பின்னர் அது கொஞ்சம் கொஞ்சமாக நவீனமயமாக்கப்பட்டது. அப்படி வந்ததுதான் சதாப்தி. சதாப்தி ரயில்கள் நாட்டின் அதிவேகமான ரயில்களில் ஒன்றாகும். இது அதிகபட்சமாக மணிக்கு 140 கி.மீ. இருப்பினும் சராசரியாக 85-93 கி.மீ வேகத்தில் இயக்கப்பட்டு வருகிறது.

ஆனால் போபாலிருந்து இயக்கப்படும் சதாப்தி வண்டியானது மணிக்கு 160 கி.மீ வேகம் வரை செல்லும். நாட்டின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் 100வது பிறந்த நாளை கொண்டாடும் விதமாக இந்த ரயில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்நிலையில், இந்த ரயிலுக்கு மாற்றாக ‘வந்தே பாரத்’ ரயில் அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் நோக்கம் முக்கிய நகரங்களை இணைப்பதாகும். சதாப்தி வண்டி 140 கி.மீ வேகத்தில் இயக்கப்பட்டால், வந்தே பாரத் ரயில் 160 கி.மீ வேகத்தில் இயக்கப்படும். அந்த வகையில் முதல் வந்தே பாரத் ரயில் கடந்த 2019ம் ஆண்டு இயக்கப்பட்டது. இதற்கு அமோக வரவேற்பு இருந்த நிலையில் அடுத்தடுத்த ரயில்கள் களத்தில் இறக்கப்பட்டன. இந்த ரயிலில் மொத்தமாக இதில் சுமார் 887 பேர் பணிக்கலாம்.

இந்நிலையில் தற்போது போபால் டூ டெல்லிக்கு வந்தே பாரத் ரயில் இன்று முதல் தனது சேவையை தொடங்க இருக்கிறது. இந்த இரு நகரங்களுக்கும் இடையே மொத்தம் 706 கி.மீ தொலைவு இருக்கிறது. இந்த தொலைவை வந்தே பாரத் ரயில் 7.50 மணி நேரத்தில் கடந்து விடும். இந்த புதிய வந்தே பாரத் ரயிலை பிரதமர் நரேந்திர மோடி இன்று கொடியசைத்து தொடங்கி வைக்கிறார். இது நாட்டின் 11வது வந்தே பாரத் ரயிலாகும். என்னதான் சதாப்தி ரயில் வேகமான ரயிலாக இருந்தாலும், போபாலிலிருந்து டெல்லி வந்து சேர 8 மணி நேரத்திற்கும் மேல் ஆகும். தற்போது மும்பையிலிருந்து டெல்லியின் ஹஸ்ரத் நிஜாமுதீன் ரயில் நிலையம் வரை இயக்கப்படும் ராஜ்தானி எக்ஸ்பிரஸ் மட்டுமே 7.55 மணி நேரத்தில் போபாலிலிருந்து டெல்லி வந்து சேர்கிறது.

எனவே இதுபோன்று விரைவு ரயில்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்று மத்தியப் பிரதேச மக்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்திருந்தனர். இக்கோரிக்கையின் அடிப்படையில்தான் தற்போது வந்தே பாரத் ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் போபாலின் ராணி கம்லாபதி ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்டு ஆக்ரா கான்ட் நிலையம், வீராங்கனை லக்ஷ்மிபாய் ஜான்சி மற்றும் குவாலியர் ரயில் நிலையம் வழியாக டெல்லி வந்து சேரும். ஆனால் டெல்லி ரயில் நிலையத்தில் நிறுத்துவதற்கு பதிலாக ஹஸ்ரத் நிஜாமுதீன் ரயில் நிலையத்தில் இந்த வந்தே பாரத் ரயில் நிறுத்தப்படலாம் என்றும் சொல்லப்படுகிறது.

இந்த ரயில் வாரத்தில் 6 நாட்களுக்கு இயக்கப்படும். அதாவது போபாலிலிருந்து விடியற்காலை 5.55 மணிக்கு புறப்படும் இந்த ரயில் காலை 11.40 மணியளவில் ஆக்ரா வந்து சேரும். பின்னர் ஆக்ரா கான்ட் ஸ்டேஷனில் 5 நிமிடம் நின்றுவிட்டு பின்னர் கிளம்பி சரியாக மதியம் 1:45 மணிக்கு டெல்லிக்கு வந்து சேரும். அதேபோல ரிட்டன் ரயில் மதியம் 2:45 மணிக்கு புது டெல்லியிலிருந்து வந்தே பாரத் ரயில் புறப்படும். இது மாலை 4.45 மணிக்கு ஆக்ராவை வந்தடையும் பின்னர் அங்கிருந்து புறப்பட்டு இரவு 10.45 மணியளவில் போபாலின் ராணி கமலாபதி ரயில் நிலையத்தை வந்தடையும் என்பது குறிப்பிடத்தக்கது.

Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.