இந்தூர்: மத்தியப்பிரதேசத்தில் படிக்கட்டு கிணறு இடிந்து விழுந்த விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 35ஆக அதிகரித்துள்ளது. மத்தியபிரதேச மாநிலம் இந்தூரில் படேல் நகரில் உள்ள பழமைவாய்ந்த பலேஷ்வர் மகாதேவ் ஜுலேலால் கோயிலில் ராமநவமி விழாவின்போது கிணற்றின் மீது இருந்த சிலாப் உடைந்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 40க்கும் மேற்பட்டோர் கிணற்றுக்குள் விழுந்தனர். தேசிய பேரிடர் மீட்பு குழுவினர், ராணுவ வீரர்கள் உதவியுடன் மீட்பு பணிகள் நடந்து வருகின்றது. இந்த சம்பவத்தில் 13 பேர் உயிரிழந்ததாக நேற்று முன்தினம் கூறப்பட்டது. மேலும் பலர் காயமடைந்தனர். இந்நிலையில் விபத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கையானது 35ஆக உயர்ந்துள்ளது. மேலும் ஒருவரை காணவில்லை என்றும் அவரை தேடும் பணி தீவிரமாக நடந்து வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.