இங்கிலாந்தைச் சேர்ந்த திரைப்பட எடிட்டர் ஒருவர் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி வரலாற்று நாயகர்கள் செல்ஃபி எடுப்பது போன்ற புகைப்படங்கள் இணையத்தில் வரவேற்பைப் பெற்றுள்ளன.
டங்கன் தாம்ப்ஸன் என்ற திரைப்பட எடிட்டர் ஒருவர் மிட்ஜர்னி என்ற மென்பொருளைப் பயன்படுத்தி கற்பனையான சில புகைப்படங்களை எடுத்திருந்தார்.
ஏசு கிறிஸ்து தனது கடைசி விருந்தின் போது சீடர்களுடன் சேர்ந்து செல்ஃபி எடுத்துக் கொண்டது போலவும், மாவீரன் நெப்போலியன் வாட்டர் லூ போரின் போது தனது வீரர்களுடன் எக்காளமிட்டு சிரிப்பது போன்றும் படங்களை வெளியிட்டிருந்தார்.
உலக அழகி கிளியோபாட்ரா, ராணி எலிசபெத், போப் பிரான்சிஸ் போன்றோரும் தாங்களாகவே செல்ஃபி எடுப்பது போன்று செயற்கை நுண்ணறிவு புகைப்படங்களை வெளியிட்டிருந்தார். இந்தப் படங்கள் தற்போது இணையத்தில் பேசு பொருளாகி உள்ளன