லிஜோ ஜோஸ் இயக்கத்தில் வெளியான ‘நண்பகல் நேரத்து மயக்கம்’ படத்திற்கு 8.8 ரேட்டிங் கொடுக்கப்பட்டுள்ளது, இப்படத்தை சோனி லிவ் தளத்தில் பார்க்கலாம். இந்த படத்தில் மம்மூட்டி, ரம்யா சுவி, அசோகன், ரம்யா பாண்டியன், விபின் அட்லீ போன்ற பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.
ராகுல் சதாசிவம் இயக்கத்தில் வெளியான ‘பூதகளம்’ படத்திற்கு 7.5 ரேட்டிங் கொடுக்கப்பட்டுள்ளது, இந்த படத்தை சோனி லிவ் தளத்தில் காணலாம். இந்த படத்தில் ரேவதி, ஷேன் நிகாம், சஜ்ஜு குரூப், ஜேம்ஸ் இலியா, ஆதிரா படேல் போன்ற பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.
2022ம் ஆண்டு வெளியான ‘ஃப்ரீடம் பைட்’ படத்திற்கு 7.5 ரேட்டிங் கொடுக்கப்பட்டுள்ளது, இந்த படத்தை சோனி லிவ் தளத்தில் காணலாம். இப்படத்தில் ரஜிஷா விஜயன், ஜோஜு ஜார்ஜ், சித்தார்த் சிவா, ஸ்ரீண்டா போன்ற பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.
வினீத் ஸ்ரீனிவாசன் இயக்கத்தில் வெளியான ‘ஹ்ரிதயம்’ படத்திற்கு 8.1 ரேட்டிங் கொடுக்கப்பட்டுள்ளது, இந்த படத்தை டிஸ்னி+ஹாட்ஸ்டாரில் பார்க்கலாம். இப்படத்தில் பிரணவ் மோகன்லால், தர்ஷனா ராஜேந்திரன் மற்றும் கல்யாணி ப்ரியதர்ஷன் போன்ற பலர் நடித்துள்ளனர்.
டிஜோ ஜோஸ் ஆண்டனி இயக்கத்தில் வெளியான ‘ஜன கன மன’ படத்திற்கு 8.3 ரேட்டிங் கொடுக்கப்பட்டுள்ளது, இந்த படத்தை நெட்ப்ளிக்சில் பார்க்கலாம். இப்படத்தில் பிரித்விராஜ், சுராஜ் வெஞ்சாரமூடு, மம்தா மோகன்தாஸ், ஸ்ரீதிவ்யா போன்ற பலர் நடித்துள்ளனர்.
விஷ்ணு மோகன் இயக்கத்தில் வெளியான ‘மேப்படியான்’ படத்திற்கு 7.2 ரேட்டிங் கொடுக்கப்பட்டுள்ளது, இப்படத்தை அமேசான் ப்ரைம் வீடியோவில் பார்க்கலாம். இப்படத்தில் உன்னி முகுந்தன், கோட்டயம் ரமேஷ், சஜ்ஜு குரூப், அணு வர்கீஸ் போன்ற பலர் நடித்துள்ளனர்.
வி.கே.பிரகாஷ் இயக்கத்தில் வெளியான ‘ஒருத்தீ’ படத்திற்கு 7.6 ரேட்டிங் கொடுக்கப்பட்டுள்ளது, இப்படத்தை அமேசான் ப்ரைம் வீடியோவில் பார்க்கலாம். இப்படத்தில் சஜ்ஜு குரூப், நவ்யா நாயர், விநாயகன் மற்றும் லலிதா போன்ற பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.
அமல் நீரத் இயக்கத்தில் வெளியான ‘பீஷ்ம பர்வம்’ படத்திற்கு 7.7 ரேட்டிங் கொடுக்கப்பட்டுள்ளது, இப்படத்தை டிஸ்னி+ஹாட்ஸ்டாரில் பார்க்கலாம். இந்த படத்தில் மம்மூட்டி, சௌபின் ஷாஹிர், ஸ்ரீநாத் பாசி, நதியா மொய்டு போன்ற பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.
கமல்.கே.எம் இயக்கத்தில் வெளியான ‘படா’ படத்திற்கு 7.8 ரேட்டிங் கொடுக்கப்பட்டுள்ளது, இப்படத்தை அமேசான் ப்ரைம் வீடியோவில் பார்க்கலாம். இந்த படத்தில் குஞ்சகோ போபன், ஜோஜு ஜார்ஜ், விநாயகன், திலீஷ் போத்தன் போன்ற பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.
லீஜு கிருஷ்ணா இயக்கத்தில் வெளியான ‘படவெட்டு’ படத்திற்கு 7.8 ரேட்டிங் கொடுக்கப்பட்டுள்ளது, இப்படத்தை நெட்ப்ளிக்சில் பார்க்கலாம். இந்த படத்தில் நிவின் பாலி, அதிதி பாலன், ஷம்மி திலகன் போன்ற பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.