சண்டிகர்: கிரத்பூர் சகாப்-சி அனந்த்பூர் சாகிப்-நங்கல்-உனா சுங்கச்சாவடிக்கு கட்டணம் கிடையாது என பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் அறிவித்துள்ளார். நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் சுங்கக்கட்டணம் உயர்த்திய நிலையில் பஞ்சாப் முதல்வர் அதிரடி அறிவித்துள்ளார். சுங்கக்கட்டணம் வசூலிக்கும் நிறுவனம் ஒப்பந்தத்தை பலமுறை மீறியுள்ளது. மக்களின் பணத்தை சுங்கக்கட்டணம் என்ற பெயரில் கொள்ளையடிப்பதை ஏற்க முடியாது எனவும் கூறினார்.