படகுகள் கடந்து செல்லும் தூக்குப்பாலத்தின் உச்சியில் செங்குத்தாக தொங்கிய இளைஞர்..!

அமெரிக்காவில் தூக்குப் பாலத்தில் இளைஞர் ஒருவர் செங்குத்தாக தொங்கிய வீடியோ இணையத்தில் அதிகம் பேரால் பார்க்கப்பட்டு வருகிறது.

ப்ளோரிடா மாகாணத்தின் கடற்கரை நகரமான மியாமியில் பெரிய படகுகள் கடலுக்குச் செல்வதற்காக பிரிக்கல் அவின்யூ என்ற பெயரில் தூக்குப்பாலம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்தப் பாலத்தின் கீழ் பெரிய படகு செல்வதற்காக இந்தப் பாலம் தூக்கப்பட்டது. அப்போது இளைஞர் ஒருவர் பாலத்தில் ஏறி செங்குத்தாக சென்றதும் அதைப் பிடித்து தொங்கியபடி சாகசம் செய்தார்.

90 அடி உயரத்தில் இருந்த அவர் தனது கைகள் வியர்ப்பதாகக் கூறி பாலம் இறக்கப்படும் போது, போலீசார் வருவதற்குள் அங்கிருந்து தப்பிச் சென்றார்

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.