அகமதாபாத் : ஐபிஎல் தொடக்க விழாவில் நடிகை தமன்னா மற்றும் ரஷ்மிகா மந்தானா பல ஹிட் பாடல்களுக்கு விதவிதமாக ஆட்டம் போட்டு ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தினர்.
16வது ஐபிஎல் 2023 தொடக்க விழா அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் பிரம்மாண்டமாக தொடங்கியது.
புல்வாமா தாக்குதல்,கொரோனா போன்ற காரணங்களால், கடந்த நான்கு ஆண்டுகளாக ஐபிஎல் தொடக்கவிழா நடைபெறாத நிலையில் நேற்று மிகவும் பிரமாண்டமான முறையில் ஐபிஎல் தொடக்க விழா கோலாகலமாக நடந்தது.
ஐபிஎல் தொடக்கவிழா
கிரிகெட் பிரியர்களுக்காக 2008ம் ஆண்டு தொடங்கப்பட்டது தான் ஐபிஎல் கிரிக்கெட் போட்டி. இதுவரை இந்த தொடர்15 சீசன் முடிந்துள்ள நிலையில், 16ஆவது ஐபிஎல் போட்டி தொடங்கி உள்ளது. இந்த நிகழ்ச்சியில் பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா மனைவி மற்றும் குழந்தைகளுடன் கலந்து கொண்டார். மேலும், எம்எஸ் தோனி மற்றும் ஹர்திக் பாண்டியா மற்றும் அருண் துமால் ஆகியோர் கலந்து கொண்டனர்.
உற்சாக டான்ஸ்
இந்த நிகழ்ச்சியில் பாலிவுட் நடிகர் ஆர்ஜித் சிங் இந்தி பாடல்களை பாடினார். இதனைத் தொடர்ந்து நடிகைகள் ராஷ்மிகா மந்தனா மற்றும் தமன்னா ஆகியோர் சினிமா பாடலுக்கு உற்சாகமாக நடனமாடினார்கள். விஷால் நடிப்பில் வெளியான எனிமி படத்தில் வரும் மனசோ இப்போ தந்தி அடிக்கிது பாடலுக்கு தமன்னா நடனமாடி ரசிகர்களின் மனதை உண்மையிலேயே தந்தி அடிக்க வைத்தார்
புஷ்பா பாடலுக்கு
அதேபோல நேஷ்னல் க்ரஷ் ராஷ்மிகா புஷ்பா படத்தில் வரும் வா சாமி வாயா சாமி…. பாடலுக்கு வளைந்து தெளிந்து ஆட்டம் போட்டார். அதே போல ஆஸ்கர் விருது வென்ற நாட்டு நாட்டு பாடலுக்கு பார்வையாளர்கள் அனைவரும் அசந்து போகும் அளவுக்கு ஆட்டம் போட்டார். தமன்னா, ராஷ்மிகாவின் ஆட்டத்தை பார்த்த ரசிகர்கள் மெய் மறந்து போனார்கள். இணையத்தில் இவர்களின் டான்ஸ் வீடியோ வைரலாகி வருகிறிது.
படங்களில் பிஸி
நடிகை ராஷ்மிகா தற்போது புஷ்பா 2 திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. புஷ்பா 2 படத்தில் ஸ்ரீவள்ளி கதாபாத்திரத்தில ராஷ்மிகாவை பார்க்க ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்தில் உள்ளனர். அதே போல, தமன்னா ரஜினிகாந்துடன் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். இப்படம் தீபாவளிக்கு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.