டெல்லி: இந்தியாவில் 2 நாட்கள் 3 அயிரத்துக்கும் மேல் பதிவான ஒரு நாள் கொரோனா பாதிப்பு 2,995 ஆக குறைந்தது. நாட்டில் கொரோனா பாதிப்புகள் சீராக குறைந்து வந்த நிலையில், கடந்த சில வாரங்களாக தொற்று எண்ணிக்கை கொஞ்சம்,கொஞ்சமாக அதிகரித்து வந்தது. சமீப நாட்களாக கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், நாட்டின் தினசரி கொரோனா பாதிப்பு நிலவரத்தை ஒன்றிய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி கடந்த 24 மணி நேரத்தில் 2,995 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதன் மூலம் இந்தியாவில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 15,208ல் இருந்து 16,354 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவில் இருந்து நேற்று 1,390 பேர் டிஸ்சார்ஜ் ஆன நிலையில் இன்று 1840 பேர் குணமடைந்துள்ளனர். கொரோனா தொற்று பாதிப்பிற்கு இன்று ஒரே நாளில் 9 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் சிகிச்சை பெறுவோர் விகிதம் 0.04% ஆக உள்ளது. குணமடைபவர்களின் விகிதம் 98.77%ஆகவும், உயிரிழப்பு விகிதம் 1.19%ஆகவும் உள்ளது. மேலும் இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 09,981 பேர் கொரோனா தடுப்பூசி போட்டுள்ள நிலையில் இதுவரை தடுப்பூசி போட்டவர்களின் எண்ணிக்கை 220,66,09,015ஆக அதிகரித்துள்ளது.
இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு 2வது நாளாக 3,000ஆக இருந்த நிலையில் இன்று 3 ஆயிரத்து கீழ் பதிவாகியுள்ளது. நாட்டில் தினசரி கொரோனா பாதிப்பு மெல்ல மெல்ல குறைவதால் மக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர்.