தமிழ்நாட்டில் 8 புதிய மாவட்டங்கள்? அரசு எடுக்கும் முடிவு என்ன?

ஆரணி, கும்பகோணம் தனி மாவட்டங்களாக அறிவிக்கப்படுமா என்று சட்டமன்ற உறுப்பினர்கள் கேள்வி எழுப்பிய நிலையில் அதற்கு வருவாய்த் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் பதிலளித்துள்ளார்.

திருவண்ணாமலை மாவட்டத்தில், ஆரணி வட்டத்தில் உள்ள பல ஊர்களிலிருந்து மாவட்டத் தலைநகரான திருவண்ணாமலைக்கு செல்வதற்கு நீண்ட நேரம் தேவைப்படுகிறது. இதனால் பொது மக்கள் மிகுந்த துயரத்துக்கு ஆளாகிறார்கள். எனவே ஆரணியை தலைமையிடமாக கொண்டு தனி மாவட்டம் அமைக்கப்படுமா என்று அதிமுக சட்டமன்ற உறுப்பினர் சேவூர் ராமச்சந்திரன் சட்டமன்றத்தில் கேள்வி எழுப்பினார்.

அதேபோல் திமுக கொறடா கோவி செழியன், கும்பகோணத்தை தலைமையிடமாக கொண்டு தனி மாவட்டம் அமைக்கப்படுமா என்று கேள்வி எழுப்பினார். அதிக வருவாய் கொண்ட பகுதி, மாநகராட்சியை மையமாக கொண்ட பகுதி. மாவட்ட தலைமை மருத்துவமனை, நீதிமன்றங்கள், இரண்டு கல்லூரிகள், என பல த

குதிகளை கொண்டுள்ளது. எனவே கும்பகோணத்தை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் அமைக்கப்படுமா? இது கும்பகோணம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் சாக்கோட்டை க.அன்பழகன் கோரிக்கையும் கூட என்று கோவி செழியன் கூறினார்.

இதற்கு பதிலளித்து வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் பேசினார்.

அப்போது பேசிய அவர், “தமிழ்நாட்டில் பெரிய மாவட்டங்கள் நிறைய உள்ளன. மாவட்டத்தில் ஒரு இடத்திலிருந்து தலைநகர் நோக்கி செல்ல அதிக பயண நேரம் ஆகிறது. எனவே தங்கள் மாவட்டத்தை பிரிக்க வேண்டும் என்று என்னிடத்திலும் முதலமைச்சரிடத்திலும் பல்வேறு கோரிக்கைகள் வந்துள்ளன. அந்த வகையில் மொத்தம் எட்டு மாவட்டங்களை பிரிக்க வலியுறுத்தி பொதுமக்கள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை வைத்துள்ளனனர்.

அதேபோல் ஆர்டிஓ ஆபிஸ்களை பிரிக்க வேண்டும் என்றும், தாலுகா ஆபிஸ்களை பிரிக்க வேண்டும் என்றும் கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர்.

புதிய மாவட்டங்களை பிரிப்பதற்கு உண்டான சட்டப்படியான தகுதிகள் அந்தப் பகுதிகளுக்கு இருக்குறதா என்று பார்க்க வேண்டும். அதேபோல் மாவட்டங்களை பிரிப்பதற்கு தேவையான நிதி நிலை இருக்க வேண்டும். இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு முதலமைச்சர் தான் இதில் முடிவெடுப்பார்” என்று கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.