ஆர்ஆர்ஆர் தமிழ் படம் : தெலுங்கு ரசிகர்களை டென்ஷனாக்கிய பிரியங்கா சோப்ரா

கடந்த வருடம் ராஜமவுலி இயக்கத்தில் ராம்சரண், ஜூனியர் என்டிஆர் நடிப்பில் வெளியான படம் ஆர்ஆர்ஆர். சமீபத்தில் நடைபெற்று முடிந்த 95வது ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் இந்த படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடல் சிறந்த ஒரிஜினல் பாடல் என்கிற பிரிவில் ஆஸ்கர் விருதை பெற்றது. அதே சமயம் அந்த ஆஸ்கர் விழா மேடையில் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய தொகுப்பாளர் இந்த படத்தைப் பற்றி குறிப்பிடும்போது பாலிவுட் படம் என குறிப்பிட்டார்.

பொதுவாக இந்திய படங்களை வெளிநாடுகளில் பாலிவுட் படம் என்பதாகவே பெரும்பாலும் குறிப்பிட்டு வருவதால் தவறுதலாக அவர் இப்படி குறிப்பிட்டு விட்டார். ஆனால் தங்களது தெலுங்கு திரையுலகத்தின் அடையாளம் பெருமை அந்த விழா மேடையில் மறைக்கப்பட்டு விட்டதே என கொந்தளித்த தெலுங்கு ரசிகர்கள் இதை அப்போது கடுமையாக விமர்சித்தனர். இந்த நிலையில் தற்போது பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா சமீபத்திய பேட்டி ஒன்றில் ஆர்ஆர்ஆர் படத்தை தமிழ் படம் என்று குறிப்பிட்டு தன் பங்கிற்கு தெலுங்கு ரசிகர்களை இன்னும் டென்ஷன் ஆக்கி உள்ளார்.

அவர் பேட்டி அளித்தது வெளிநாட்டு சேனல் என்பதால் வழக்கம் போல அதன் தொகுப்பாளர் பேசும்போது, பாலிவுட் சினிமா தற்போது மிகப்பெரிய அளவில் வளர்ந்து விட்டது. மிகப்பெரிய ஆக்சன், காதல் கூடவே நடனம் என்று..” என அவர் கூறிக்கொண்டிருக்கும்போதே இடைமறித்த பிரியங்கா சோப்ரா, “ஆர்ஆர்ஆர் படத்தை பற்றி தானே சொல்கிறீர்கள்.. பை தி வே அது ஒரு தமிழ் படம்” என்று கூறியதுடன், 'தமிழில் இதுபோன்ற பெரிய மிகப்பெரிய பிளாக்பஸ்டர் படங்களை உருவாக்குகின்றனர்” என்று கூறினார்.

இப்போது மட்டுமல்ல இதற்கு முன்பும் சில பேட்டிகளில் ஆர் ஆர் படத்தை தமிழ் படம் என்று கூறி வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது அவர் இப்படி குறிப்பிட்டதை கேள்விப்பட்டு சோசியல் மீடியாவில் தெலுங்கு ரசிகர்கள் அவரை வறுத்து எடுத்து வருகின்றனர்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.