சென்னை மாநகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்க “சென்னை எல்லைச் சாலை” எனும் பெயரில் புதிய திட்டம் ஒன்றை தமிழக அரசு கொண்டுவந்துள்ளது.
தமிழக அரசின் நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை கொள்கை விளக்க குறிப்பில், ‘சென்னை எல்லை சாலை’ திட்டம் குறித்து தகவல் வெளியாகி உள்ளது.
சென்னை மற்றும் சென்னையில் புறநகர் பகுதிகளில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக இந்த திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் குறிப்பாக கோடம்பாக்கம், ஈக்காட்டுத்தாங்கல், அடையாறு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ‘பீக் ஹவர்’ என்று சொல்லக்கூடிய காலை மற்றும் மாலை நேரங்களில் போக்குவரத்து நெரிசல் அதிகம் காணப்படுகிறது.
மேலும், சென்னையில் மெட்ரோ இரண்டாம் கட்ட பணிகள் தொடங்கப்பட்டுள்ளதால், போக்குவரத்து நெரிசல் மேலும் அதிகரித்து உள்ளது.
இதனை குறைக்க தற்போது இந்த திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் இந்த திட்டம் விரைவில் அமலுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.