சுவாசக் கோளாறால், இத்தாலியில் உள்ள மருத்துவமனையில் 3 நாட்களாக சிகிச்சை பெற்றுவந்த போப் பிரான்சிஸ் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
மருத்துவமனை வாயிலில் அவரை காண வந்திருந்தவர்களை பார்த்து கையசைத்துவிட்டு, வாடிகன் நகருக்கு கிளம்பினார்.
ஈஸ்டர் பண்டிகையை அனுசரிக்கும் விதமாக கொண்டாடப்படும் குருத்தோலை ஞாயிறு அன்று நடைபெறும் ஜெபக்கூட்டத்தில் போப் பிரான்சிஸ் பங்கேற்பார் என வாடிகன் தேவாலயம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.