சென்னை: பத்து தல படத்தில் பாதிக்கு மேல் தான் சிம்பு வருவதை தியேட்டரில் பார்த்து ஏகப்பட்ட ரசிகர்கள் அப்செட் ஆகி உள்ளனர். அதை வைத்து அவர்கள் கேலியாக உருவாக்கிய மீம்கள் இணையத்தில் தீயாக பரவி வருகிறது.
சில்லுனு ஒரு காதல் படத்தை இயக்கிய இயக்குநர் ஒபிலி கிருஷ்ணா சிம்புவை வைத்து இயக்கி உள்ள படம் தான் பத்து தல.
கன்னடத்தில் சிவராஜ்குமார் நடித்த ரோலில் தான் தமிழில் மணல் மாஃபியா கேங்ஸ்டர் ஏஜி ராவணனாக சிம்பு நடித்துள்ளார்.
மாநாடு படத்தை முந்தல
நீண்ட வருடங்கள் கழித்து சிம்புவுக்கு மாநாடு எனும் மிகப்பெரிய பிளாக்பஸ்டர் படம் கிடைத்தது. அந்த படத்துக்கு பிறகு தனது உடலை மேலும், ஒல்லியாக்கியும் பருமனாக மாறியும் வெந்து தணிந்து காடு படத்தில் வெரைட்டி காட்டி சிம்பு நடித்திருந்தார். ஆனால், அந்த படமும் மாநாடு படம் அளவுக்கு ரசிகர்களை அதிகம் கவரவில்லை. இந்நிலையில், சமீபத்தில் வெளியான பத்து தல படம் கூட மாநாடு படத்தை முந்தவில்லை என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
வாத்தி தான் டாப்
பத்து தல படம் முதல் நாளில் உலகம் முழுவதும் 12 கோடி வசூல் செய்ததாக அறிவிப்பு வெளியான நிலையில், தனுஷின் வாத்தி திரைப்படம் முதல் நாளில் 14 கோடி ரூபாய் வசூல் ஈட்டியதாகவும் 100 கோடி கிளப்பில் இணைந்ததாகவும் அறிவிப்புகள் வெளியாகின. இந்நிலையில், தனுஷின் வாத்தி படத்தை சிம்புவின் பத்து தல முந்தவில்லை என தனுஷ் ரசிகர்கள் வம்பிழுத்து வருகின்றனர்.
சிம்புவை கலாய்த்து மீம்ஸ்
ப்ளூ சட்டை மாறன் சிம்புவை டம்மி பீஸ் என கடுமையாக விமர்சித்தது சிம்பு ரசிகர்களை கொந்தளிக்க செய்த நிலையில், சிம்புவின் ஹேட்டர்கள் சிலர் ஏகப்பட்ட ட்ரோல் மீம்களை பதிவிட்டு சிம்புவையும் பத்து தல படத்தையும் கலாய்த்து வருகின்றனர்.
சூட்டிங்க்கு தானே லேட்டா வருவாரு
பத்து தல படத்தில் நடிகர் சிம்பு இடைவேளை காட்சியின் போது தான் வருகிறார். மேலும், இரண்டாம் பாதியிலும் அவரது போர்ஷன்கள் ரொம்பவே குறைவாக உள்ளதாக ரசிகர்கள் குற்றச்சாட்டு வைத்து வரும் நிலையில், பத்து தல படம் ஆரம்பித்து ஒரு மணி நேரமா சிம்புவை காணோமே.. வழக்கமாக சூட்டிங்க்குத் தானே லேட்டா வருவாரு என மன்சூர் அலி கானின் டெம்பிளேட் மீமை போட்டு கலாய்த்து வருகின்றனர்.
குரல் கொடுக்கவில்லை
ரோகிணி தியேட்டரில் பத்து தல படத்தை பார்க்க வந்த நரிக்குறவ இன மக்களுக்கு நடந்த அநியாயத்தை எதிர்த்து பத்து தல படத்தில் நடித்த நடிகை பிரியா பவானி சங்கரை தவிர்த்து வேறு யாருமே குரல் கொடுக்காதது ஏன்? என்கிற கேள்வி எழுந்துள்ளது. மேலும், இந்த விவகாரம் தொடர்பாக சிம்பு பேசாமல் அமைதி காப்பது ஏன்? என்றும் நெட்டிசன்கள் விளாசி வருகின்றனர்.
பத்து தல வெற்றி விழா
சிம்புவின் பத்து தல படம் வெளியாகி 2 நாள் ஆன நிலையில், தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா சிம்புவுக்கு மாலை அணிவித்து படக்குழுவுடன் வெற்றி விழா கொண்டாடிய புகைப்படம் தற்போது வெளியாகி உள்ளது. எங்கே படத்தின் ஹீரோ கவுதம் கார்த்திக், ஹீரோயின் பிரியா பவானி சங்கர், வில்லன் கவுதம் மேனன் என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.