சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள கீழடி, கொந்தகை, அகரம், மணலூரில் நடந்த 8 கட்ட அகழாய்வுகள் மூலம் ஏராளமான பழங்கால பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன. கண்டெடுக்கப்பட்ட தொல்பொருட்களை பொதுமக்கள் அறிந்துகொள்ளும் வகையில் சிவகங்கை மாவட்டம் கொந்தகையில் கீழடி அருங்காட்சியகம் மைக்கப்பட்டுள்ளது.
எலக்ட்ரானிக் பஜார் – உங்கள் பட்ஜெட்டுக்கு ஏற்ற ஸ்மார்ட்போன்கள்
அடுத்த ரவுண்டை ஆரம்பித்த த்ரிஷா!
செட்டிநாடு கலைநயத்துடன் 18.80 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள இந்த அருங்காட்சியகத்தை முதல்வர் ஸ்டாலின் கடந்த 6ஆம் தேதி திறந்து வைத்தார். தொடர்ந்து அங்கு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள தொல்பொருட்களை ஆர்வத்துடன் பார்வையிட்ட முதல்வர் ஸ்டாலின் அங்கு காட்சி படுத்தப்பட்டிருந்த மண்பானைக்கு அருகில் நின்று செல்ஃபி எடுத்தார். அந்த போட்டோ இணையத்தில் பெரும் வைரலானது.
இந்நிலையில் இந்த அருங்காட்சியகத்தை நடிகர் சூர்யா, தனது மனைவி ஜோதிகா மகள் தியா மகன் தேவ் அப்பா சிவகுமார் மற்றும் அம்மாவுடன் நேரில் சென்று பார்வையிட்டுள்ளார். அப்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்பி சு வெங்கடேசன் உடன் இருந்தார். கீழடி அருங்காட்சியகத்தை குடும்பத்துடன் பார்வையிட்ட நடிகர் சூர்யா தனது மனைவி ஜோதிகாவுடன் சேர்ந்து அங்குள்ள ஊழியர்களுடன் தரையில் அமர்ந்து புகைப்படம் எடுத்துக் கொண்டார்.
Samantha: சினிமாவில் இருந்து ஒதுங்கும் சமந்தா… அதிர்ச்சியில் ரசிகர்கள்!
இதேபோல் எம்பி சு வெங்கடேசனுடனும் சூர்யா மற்றும் அவரது குடும்பத்தினர் போட்டோ எடுத்துள்ளனர். அந்த போட்டோக்களை எம்பி சு வெங்கடேசன் தனது சோஷியல் மீடியா பக்கத்தில் ஷேர் செய்துள்ளார். இந்த போட்டோக்கள் தற்போது வைரலாகி வருகிறது. தற்போது நடிகர் சூர்யா, சூர்யா 42 என்ற படத்தில் நடித்து வருகிறார்.
Actor: வாரிசு நடிகையே கதி என கிடந்த ‘பல்க்’ நடிகர்!
சமீபத்தில் மனைவி, மகள் மற்றும் மகன் என குடும்பத்துடன் மும்பையில் குடியேறினார் நடிகர் சூர்யா. இதையடுத்து ஜோதிகாவுக்கும் சிவகுமாருக்கும் இடையே பிரச்சனை என்றும் இந்த பிரச்சனையால்தான் சூர்யாவுடன் நடிகை ஜோதிகா மும்பைக்கு தனிக்குடித்தனம் சென்று விட்டதாகவும் வதந்திகள் பரவின. இந்நிலையில் அந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் நடிகர் சூர்யா தனது மனைவி மற்றும் அப்பாவுடன் சேர்ந்து கீழடி அருங்காட்சியகத்தை பார்வையிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.