அ.தி.மு.க பொதுச் செயலாளர் பதவிக்கு தேர்தல் என அறிவிக்கப்பட்ட உடனேயே அதனை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் ஓ.பி.எஸ் மனு தாக்கல் செய்தார்.
அதைத்தொடர்ந்து கடந்த சில நாள்களுக்கு முன்பு, அ.தி.மு.க பொதுக்குழு தீர்மானங்கள் தொடர்பான ஓ.பி.எஸ் தரப்பின் அனைத்து மனுக்களையும், சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அப்போதே, அ.தி.மு.க-வின் பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டதாக அறிவிப்பு வெளியானது.
பின்னர் இதுதொடர்பாக விகடன் இணையதளத்தில் கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.
அதில், அ.தி.மு.க பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டது அ.தி.மு.க-வுக்கு… `பலம் சேர்க்கும்’ அல்லது `எந்த மாற்றமும் ஏற்படுத்தாது’ அல்லது இதில் `கருத்து இல்லை’ எனக் கேள்வி கேட்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் தற்போது கருத்துக்கணிப்பு முடிவுகளின்படி, அதிகபட்சமாக 56 சதவிகிதம் பேர், எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டது அ.தி.மு.க-வுக்கு `எந்த மாற்றமும் ஏற்படுத்தாது’ என்று தெரிவித்திருக்கின்றனர். அதற்கடுத்தபடியாக, 40 சதவிகிதம் பேர் பலம் சேர்க்கும் என்றும், 4 சதவிகிதம் பேர் கருத்து இல்லை என்றும் தெரிவித்திருக்கின்றனர்.