ராஜபாளையம்: ராஜபாளையம் வந்த தமிழ்நாடு ஆளுநருக்கு கருப்பு கொடி காட்ட முயன்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கைது செய்யப்பட்டுள்ளனர். ராஜபாளையத்தில் உள்ள தனியார் கல்லூரியில் 50ம் ஆண்டு பொன்விழா நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக ஆளுநர் ஆர்.என்.ரவி அங்கு சென்றுள்ளார்.
அவரது வருகையை அறிந்து ராஜபாளையத்தில் திரண்ட 100க்கும் மேற்பட்ட மார்க்சிஸ்ட் கட்சியினர் கறுப்புக்கொடி ஏந்தியபடி ஊர்வலமாக செல்ல முயன்றனர். அப்போது ஆன்லைன் ரம்மி தடை சட்டதுக்கும், நீட் விளக்கு மசோதாவுக்கு ஒப்புதல் வழங்காத ஆளுநரை கண்டித்து முழக்கம் ஏற்படுத்தப்பட்டது. தகவலறிந்து அங்கு வந்த போலீசார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோரை தடுத்து நிறுத்த முயன்றதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
கம்யூனிஸ்ட் தலைவர்களை ஆளுநர் விமர்சித்ததன் காரணமாக தமிழ் நாட்டில் அவர் பங்கேற்கும் அரசு விழாக்களில் கருப்பு கொடி கட்டப்படும் என மார்க்சிஸ்ட் கட்சியினர் அறிவித்திருந்தனர். அதன் பேரில் ராஜபாளையம் வந்த ஆளுநருக்கு எதிராக மார்க்சிஸ்ட் கட்சியினர்
கோ பேக் ரவி என பதாகைகளை ஏந்தி கருப்பு கோடி போராட்டத்தை நடத்தினர்.