தற்போது பணவீக்கம் அதிகரித்து வரும் சூழலில், சிறு சேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்து அதன் வாயிலாக பொதுமக்கள் அதிகம் சேமிக்க அரசு நல்ல வாய்ப்பை வழங்கி இருக்கிறது. அதன்படி செல்வமகள் சேமிப்புத் திட்டம் உள்ளிட்ட சிறுசேமிப்பு திட்டங்களின் வட்டி விகிதத்தை அரசு உயர்த்தி உள்ளது.
சிறு சேமிப்பு திட்டத்தில் முதலீடு செய்வோருக்கு மத்திய அரசு அதிரடி அறிவிப்பை வெளியிட்டு உள்ளது. 2023-2024 நிதி ஆண்டின் ஏப்ரல்-ஜூன் காலாண்டிற்குரிய வட்டிவிகிதங்களை அரசாங்கம் வெளியிட்டு உள்ளது.
மூத்தகுடிமக்கள் சேமிப்பு திட்டத்தின் வட்டி விகிதமானது 8%-ல் இருந்து 8.2% ஆக உயர்த்தப்பட்டது. அதேபோல் தேசிய சேமிப்பு சான்றிதழின்(என்எஸ்சி) வட்டி விகிதம் 7 சதவீதத்திலிருந்து 7.7 சதவீதமாக அதிகரிக்கப்பட்டது.
செல்வமகள் சேமிப்பு திட்டமான சுகன்யா சம்ரித்தி யோஜனா திட்டத்தின் வட்டி விகிதமானது 7.6 சதவீதத்திலிருந்து 8 சதவீதமாக அதிகரிக்கப்பட்டது. கிசான் விகாஸ் பத்ரவில் 7.2 (120 மாதங்களில்) இருந்து 7.5 (115 மாதங்கள்) ஆக அதிகரிக்கப்பட்டு உள்ளது.