24 மாநிலங்கள்… 67 கோடி பேரின் தனிப்பட்ட தகவல்களை திருடி விற்ற 'தனி ஒருவன்' – அதிர்ச்சி தகவல்

ஐதராபாத்,

24 மாநிலங்கள், 8 மெட்ரோ நகரங்களை சேர்ந்த 66 கோடியே 90 லட்சம் பேர் மற்றும் நிறுவனங்களின் தனிப்பட்ட தகவல்களை திருடி விற்பனை செய்த நபரை தெலுங்கானா மாநிலம் சைபராபாத் போலீசார் கைது செய்துள்ளனர்.

இது தொடர்பாக போலீசார் வெளியிட்ட அறிக்கையில், 66 கோடியே 90 லட்சம் பேர் மற்றும் 104 பிரிவுகளை சேர்ந்த பல்வேறு நிறுவனங்களின் தனிப்பட்ட, ரகசிய தகவல்களை திருடி விற்பனை செய்த விநாய் பகத்வாஜ் என்ற தனி நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பாதுகாப்புத்துறை அதிகாரிகள், அரசு ஊழியர்கள், பான் கார்டு வைத்துள்ளோர், 9,10,11, மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்கள், மூத்த குடிமக்கள், டெல்லி மின்வாரியத்துறை வாடிக்கையாளர்கள், டி-மார்ட் கணக்கு வைத்துள்ளோர், தனி நபர்களின் செல்போன் எண்கள், நீட் மாணவர்கள், பெரும் பணக்காரர்கள், இன்சூரன்ஸ் கணக்கு வைத்துள்ளோர், கிரிடி கார்டு, டெபிட் கார்டு கணக்கு வைத்துள்ளோரின் தனிப்பட்ட தகவல்களை விநாயக் பகத்வாஜ் திருடியுள்ளார்.

அரியானா மாநிலம் பரிதாபாத் நகரில் இருந்து செயல்பட்டு வரும் இன்ஸ்பயர்வெப்ஸ் (Inspire Webz) என்ற இணையதளம் மூலம் விநாயக் தனிப்பட்ட நபர்களின் விவரங்களை திருடி அதை கிளவுட் டிரைவ் லிங்க் மூலம் வெறு நபர்களுக்கு விற்பனை செய்துள்ளார்.

இதையடுத்து விநாயக் பகத்வாஜை கைது செய்த போலீசார் அவரிடமிருந்து 2 செல்போன்கள், 2 லேப்டாப்கள், 135 பிரிவுகளில் தனிநபர்கள், அரசு, தனியார் நிறுவனங்களின் தனிப்பட்ட தரவுகள் அடங்கிய கருவிகளை பறிமுதல் செய்துள்ளனர்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.